கிட்டப் பார்வைக்கு இனி கண்ணாடி தேவையில்லை!


 
நாம்   பார்க்கும் உருவத்தை விழி லென்ஸ் குவியச் செய்து விழித் திரையின் மீது பிம்பமாக விழச் செய்கிறது.  மூளை அதை உருவமாக நமக்கு புலப் படுத்த நாம் அதைக் காண்கிறோம்.  விழி  லென்சில் இருந்து கண்ணுக்குள் பிம்பம் விழும் தூரம் எப்போதும் ஒரே அளவுதான். இதனால் கிட்டப் பார்வை குறைபாட்டில் கண்கள் தேவையான அளவை விட பெரியதாக இருக்கும் போது அந்த பிம்பம் முன்னாடியே விழுந்து விடும். உருவம் சரியாகத் தெரியாது. பக்கத்தில்  போய் பார்க்கும் போது இந்த தூர வித்தியாசம் சரி ஆகி உருவம் தெரியும். இதை சரி செய்ய விழித் திரை தூரத்தில் பிம்பத்தை விழ வைக்க வேண்டும் . அதற்கு கண்ணாடி அணிய  அல்லது காண்டக்ட் லென்ஸ் அணிய வேண்டியிருக்கும்

சரியான பார்வையுள்ள கண் மற்றும் கிட்டப் பார்வை உள்ள கண் படங்களை இங்கே பார்க்கும் போது கிட்டப் பார்வை குறை எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Graphic showing how myopia affects the eyeவிழிக் கோளம் வழக்கத்தை விட பெரியதாக அகலும் குறைபாட்டை நீக்கும் காண்டாக்ட் லென்ஸ் இப்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதைக் கண்ணில் பொருத்திக் கொள்வதன் மூலம் விழிக் கோளம் அளவுக்கு அதிகமாக பிதுங்கும் படி வளருவது தடுத்து நிறுத்தப் படுகிறது. இதனால் கிட்டப் பார்வைக்கு கண்ணாடி இனி தேவையில்லை. ஆமாம் கண்ணாடிக்கு டாட்டா!

Comments

 1. நல்லசெய்தி.சந்தைபடுத்தபட்டுவிட்டதா?

  ReplyDelete
 2. பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 3. Parattukku nanri. innum santhaikku varavillai. erkanave kittap parvaikku aruvai sikitchai seythu kannin alavai sari seyyum murai irukkirathu. ithu aruvai sikitchai thevaip padatha murai.

  ReplyDelete
 4. பலருக்கும் உதவும் பகிர்வு... நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்