விண்வெளிக்குப் போயிருக்கும் மீன்கள்!

 An aquatic crew of 32 medaka fish launched to the International Space Station on Oct. 23, 2012, alongside three new members of the outpost's Expedition 33 crew.

 பூமியைச் சுற்றி வந்து கொண்டு இருக்கும் சர்வ தேச விண்வெளி நிலையத்தில் எப்போதுமே விண் வெளி வீரர்கள் இருந்து வருகிறார்கள். அவ்வபோது குழுக்களாக அனுப்பப் பட்டு பூமிக்குத் திரும்புகிறார்கள்.  ஒரு குழு திரும்பும் போது இன்னொரு குழு கொஞ்ச நாளில் மீண்டும் அங்கு அனுப்பப். படும் . இப்போது  33  வது பயண குழுவாக இரண்டு ரஷ்ய வீரர்களும் ஒரு அமெரிக்க வீரரும் அங்கு போய் சேர்ந்து இருக்கிறார்கள். இவர்களுடன் 32  மேடகா வகை மீன்களும் அங்கே கொண்டு போகப் பட்டு இருக்கின்றன. அங்கு ஏற்கனவே ஜப்பான் விண்கலம்  ஜூலை  மாதத்தில் கொண்டு சேர்த்த  தண்ணீர் குடியிருப்பு இந்த மீன்களின் வருகைக்காக காத்து இருக்கிறது. இந்த குடியிருப்பு ஒரு மீன் தொட்டி.  பூஜ்ய புவி ஈர்ப்பு விசை சூழலுக்கு ஏற்றபடி வடிவமைக்கப் பட்டது.

இந்த தொட்டிக்குள்  மீன்கள்  விண்வெளிக் குடியிருப்பைத் தொடங்கும்.இங்கே இருக்கும் படம்  சிறப்பு மீன் தொட்டியையும் உள்படம்  மீன்களையும் காட்டுகிறது .பூஜ்ய புவி ஈர்ப்பு விசை சூழல்  எடையற்ற நிலையை ஏற்படுத்தக் கூடியது. இந்த எடையற்ற நிலை  அவற்றில் என்ன பாதிப்புகளை  ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் மேற்கொள்ளப் படும். இந்த மீன்கள் நலமாக இருக்க நமது வாழ்த்துக்கள்


ஒரு ஜோக்:

மீன்கள்: நாங்க விண்வெளிக்கு வந்துட்டமாக்கும்!

சர்வ தேச விண்வெளி நிலைய வீரர்கள்: வாங்க , வாங்க. இங்கே ஏற்கனவே மீன்கள் இருக்கு

என்ன சொல்றீங்க? நாங்க மட்டும் தான் இங்கே வந்திருக்கோம்னு இல்ல நினைச்சோம்

நட்சத்திரங்களை விண் மீன்கள்னு தானே சொல்றாங்க அதை சொன்னோம்!

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்