ப்ரொஜெக்டர் வெளிச்சத்தில் மரங்களில் இருந்து எட்டிப் பார்க்கும் பூச்சாண்டி! 


 இருளில் இருக்கும் மரங்களில் இப்படி பூச்சாண்டிகள் இருக்கின்றன! ப்ரொஜெக்டர் வெளிச்சத்தை அவற்றின் மீது பாய்ச்சும் போது அவற்றில் இருந்து இப்படி  வெளிப் படுகின்றன. கிளெமென்ட் ப்ரென்ட்  என்பவரின் கலை திட்டம் ஒன்றுக்காக இப்படி மரங்களின் மேல் ப்ரொஜெக்டர் அடித்து பார்க்கும் போது மரங்கள் அவற்றில் உள்ள இலைகளின் அமைப்பு காரணமாக முப்பரிமாண தோற்றம் வெளிச்சத்தில் இப்படி வடிவம் பெறுகின்றன. பார்க்க பயத்தையும் உண்டு பண்ணுகின்றன. இரவு முழுதும் இப்படி அவற்றின் மீது ப்ரொஜெக்டர் வெளிச்சம் பாய்ச்சப் பட்டால் அக்கம் பக்கம் குடியிருப்போராக இருந்தால் யாரும் தூங்க முடியாது!

அவ்வளவு வம்பு ஏன்?  கொஞ்சம் வேடிக்கை பார்த்து விட்டு ப்ரோஜெக்டோரை அணைத்து விட வேண்டியதுதான்! விட்டலச்சர்யா போன்ற மாய மந்திர படங்கள் தயாரிப்பு ஷூட்டிங்கில் தாராளமாகப் பயன் படுத்திக் கொள்ளலாம்! 

Comments