சுருட்டி சிறிதாக்கி கொள்ளக் கூடிய கார்!

 mit-city-car-concept_3sh2U_3868.jpg
 
நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த கார் இடத்தையே அடைச்சுக்குதே என்று பல சமயம் நினைக்கிறோம். இதற்குத் தீர்வு காண அமெரிக்க மசாசுசூசெட்ஸ் தொழில்நுட்பப்  பல்கலைக் கழகம் ஒரு சுருட்டி சிறிதாக்கிக் கொள்ளும் படி ஒரு காரை உருவாக்கியிருக்கிறது.

இதை நிறுத்த வேண்டிய இடங்களில் அப்படியே சுருட்டி விட்டுக் கொள்ளலாம்.சுருட்டி வைக்கப் பட்ட நிலையில் மின் சக்தி ஏற்றிக் கொள்ளுமாம்! படத்தில் முழுக் காரையும் சுருட்டி சிறிதாக்கப்  பட்ட நிலையில் இருக்கும் அதே காரையும் பார்க்கலாம்.

துளிக் கூட சுற்று சூழலைப் பாதிக்காத மின் வண்டி இது. இரண்டு பேர் மட்டும் அமரும் சிறிய கார்.  500 முதல்  600 கிலோ வரை எடை கொண்டது.  நல்ல சமர்த்தான இடம் அடைக்காத கார்!

Comments

  1. வியப்பான புதிய தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. ஆச்சரியமூட்டும் தகவலுக்கு நன்றி....

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்