சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் படகு வீடு
படத்தில் இருப்பது ஒரு படகு வீடு. லண்டன் தேம்ஸ் நதியில் இருக்கும் இதன் பெயர் ஆர்க். முழுக்க முழுக்க சூரிய மின்சக்தியே இதற்குள் பயன் படுத்தப் படுகிறது. இதன் மேல் தளத்தில் சூரிய சக்தி பெறுவதற்கான செல்கள் வரிசை அமைக்கப் பட்டு மின்சக்தி கிடைக்கிறது. இந்த மின்சக்தி விளக்குகள் போடப் படும் போது 100 சதத்திற்கு பதிலாக 80 சத மின்சக்தி மட்டுமே பயன் படுத்தப் படும் . இந்த 20 சத வித்தியாசம் கண்கள் பார்க்கும் ஒளியில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது
படுக்கைக்கு பக்கத்திலேயே விளக்குகள் மற்றும் இதர மின் சதங்களுக்கான சுவிட்ச் பலகை அமைக்கப் பட்டிருப்பதால் இருட்டில் எங்கேதான் இருக்கு இந்த சுவிட்ச் என்று துழாவிக் கொண்டிருக்க வேண்டாம்!
இந்தப் படகு வீட்டில் இன்னும் சில சிறப்புக்கள்: மழை நீர் சேமிக்கப் பட்டு உபோகிக்கப் படுகிறது. மறு சுழற்சி செய்யக் கூடிய மூங்கில் , மரம் மற்றும் கான்கிரீட் பயன் படுத்தப் படுகிறது. ஒரு பசுமை வீடு என்றே சொல்லலாம் இதை
தகவலுக்கு நன்றி...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
ReplyDeletePaarattukalukku nanri.
ReplyDelete