தனக்குத் தானே பெட் சீட் விரித்துக் கொள்ளும் படுக்கை!

 
 


மனிதன் எப்படி தன்னை தானே எப்படியெல்லாம் சோம்பேறி  ஆக்கிக் கொள்கிறான் என்பதற்கு ஒரு நல்லஉதாரணம் இந்தக் கண்டு பிடிப்பு. இருந்தாலும் அருமையான கண்டுபிடிப்பு என்று பாராட்ட வேண்டிய ஒன்றும் கூட.

ஒரு மில்லில் இயந்திர வேலை பார்க்கும்  அசெனசியோ ஜுபெல்டியா ஒவ்வொரு நாளும் உழைத்துக் களைத்து தொப்பென்று போய் படுக்கையில் விழுந்து தூங்கி விடுவார். எழும் போதெல்லாம் இந்த படுக்கையை தானாகவே களைந்து கிடக்கும் பெட் சீட்டை தன மேல் விரித்துக் கொள்ளும்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று  நினைப்பார். நினைத்தது போலவே அதை செய்தும் விட்டார்.

படுக்கையில் இருந்து எழுந்ததும்  பெட் சீட்டை விரிக்கும் ரோபோட் கைகளை இரு புறங்களிலும் அமைத்து  படுக்கையை  விட்டு உணர்விகள் மூலமாக தகவல் பெற்று ரோபோட்டின் கரங்கள் இரண்டு பக்கமும் மேல் எழும்பி  படுக்கை விரிப்பை படுக்கையின் மீது விரித்து விடுகின்றன! படுக்கையின் இரு பக்கமும் உருளைகளுடன் இணைந்த கயிறு மூலம் விரிப்பை   இப்படி நகர்த்துகிறது ரோபோட்.  தலையணைகளுடன் இணைந்த கயிறு விரிப்பை  நேர் செய்ய தலையணைகள் வைக்கப் பட்டிருக்கும் தட்டுக்கள் உயர்ந்து பெட் சீட் தலையணைகளுக்கு அடியில் போக வழி விடுகின்றன.

இது அனைத்தும் ஒரு நிமிடத்தில் நடந்து முடிக்கின்றன

    Get Your Online Business

  • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

    Brand Promotion

  • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்