ரத்த சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என மருத்துவ அறிவியல் அறிவுறுத்துவதன் காரணம் என்ன?


ரத்த சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என மருத்துவ அறிவியல்  அறிவுறுத்துவதன் காரணம் என்ன?

 ரத்த சொந்தத்தில், குறிப்பாக நேரடி உறவான அத்தை,மாமா போன்றவர்களின் சந்ததியினரைத் திருமணம் செய்து கொள்வதால் அவர்கள் வழிதோன்றும் சந்ததியினருக்கு வெண்குஷ்டம், குறைப்பிரசவம், பிறப்பில் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாலேயே மருத்துவ அறிவியல் அவ்வாறு கூறுகிறது.

                                     

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் அவர்களின் சந்ததியினர் குறைபாடுடைய மரபணுக்களோடு பிறக்க வாய்ப்புண்டு, மரபு அணுக்களை "AA" என்று குறிப்பதனால், ரத்த சொந்த திருமணதத்தில் பிறக்கும் சந்ததியினர் குறிப்பாக பெண்கள் குறைபாடுடைய மரபணுக்களோடு (Recessive Gene) பிறக்கிறார்கள். அதாவது 'Aa" மரபணுக்கள் அவர்களிடம் காணப்படும். இவர்களின் குழந்தைகளுக்கு மேற்கண்ட நோயோ, குறைபாடோ தோன்ற அதிகம் வாய்ப்பு உண்டு.

பொதுவாக வெண்குஷ்டத்தைப் பொறுத்தவரை 20,000 நபர்களில் ஒருவருக்குத் தோன்றலாம். ரத்த சொந்த சந்ததியினருக்கு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

ஃபினைல்கீடோன்யூரியா (Phenylketonuria) என்னும் சிறுநீரகக் குறைபாடு சாதாரணமாக 25,000 நபர்களில் 1 நபருக்குத்தான் ஏற்படும்.ஆனால் உறவுத் திருமண சந்ததியினைரப் பொறுத்தவரை 25,000 நபர்களில் 13 நபர்களுக்கு இக்குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

                                     

ஜப்பானில் மேற்கண்ட ஒரு ஆய்வில் உறவினரல்லாமல் திருமணம் செய்த நபர்களில், மேற்கண்ட குறைபாடுகளால் 1000 பேருக்கு 55 பேர் இறந்துள்ளனர். ஆனால் உறவுத் திருமணத்தால் 116 பேர் இறந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, ரத்த உறவுகளில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவ அறிவியல் அறிவுறுத்துகிறது.     

நன்றி!!!

இப்படிக்கு,
சிநேகிதி..

Comments

 1. Kiruththikan Yogaraja says:

  தொடர்ந்து வாசியுங்கள் சகோ ,,

  மிக்க நன்றி,,

  ReplyDelete
 2. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்...

  நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்