சட்டம் (விழித்திடு நண்பா!!!)


சட்டம்
(விழித்திடு நண்பா)

எனது அருமை தோழமைகளே,

உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். நாம் அன்றாட வாழ்வில் போதிய ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கு பயன்படும் பல்வேறு சட்டங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. நாம் ஆனைவரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய பகுதி இது...

நாம் முதலில் பார்க்க இருப்பது, குழந்தைகளும் அதன் சட்டங்களும்...

                                     

நமது நாட்டில் 50 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் உண்மையான எண்ணிக்கை அதைவிட நான்கு மடங்குகள் இருக்கலாம். ஒரு நாடு என்ற முறையில் நாம் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏமாற்றி வருகிறோம்.

பல லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளியிலோ விளையாட்டுத் திடல்களிலோ இருக்க வேண்டிய நேரத்தில், இன்னும் தொழிற்சாலைகளிலும் பண்ணைகளிலும், செங்கற்சூளைகளிலும், சுரங்கங்களிலும், வீடுகளிலும், நகர குப்பை மேடுகளிலும் வேலை செய்கின்றனர். நாம் மிக மோசமாக அவர்களை ஏமாற்றி வருகிறோம், கூட்டாக அவர்களது கல்வி, விளையாட்டு, ஓய்வு, ஆரோக்கியமான வளர்ச்சி, குழந்தைப்பருவம் ஆகியவற்றைப் பறித்து வருகிறோம். ஜனநாயகம் மற்றும் மின்னும் பொருளாதார வளர்ச்சி இருந்தபோதும் குழந்தை உழைப்பை சமூக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நாம் தொடர்ந்து வருகிறோம் என்பது நியாமற்ற செயலாகும்.

இந்தியச் சட்டங்கள் குழந்தை உழைப்பை சட்டரீதியாக அனுமதிக்கத்தக்கதாக நடத்துகின்றன. 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு சில தொழிற்பிரிவுகள் தாம், தீங்கிழைப்பவையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

2006ல் தான் வீட்டு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தான் குப்பைக் கூள‌ங்களைச் சேகரிப்பது குழந்தைகளிடையே தடை செய்யப்பட்டது. நாடு முழுவதிலுமே ஒரு சில ஆயிரம் வழக்குகள் தாம் ஒவ்வொரு ஆண்டும் தொடுக்கப்பட்டு மிகக் குறைந்த தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

14 வயதைத் தாண்டுகிற குழந்தைகளுக்கு எந்த வகையான உழைப்புக்கும் தடை எதுவும் இல்லை.

                                       

இது போல் இனி வரும் வாரங்களில் பல்வேறு சட்டங்களையும் அதன் குறிக்கோள்களையும் தொடர் பதிவுகளில் பார்ப்போமா?...

நன்றி!!!

என்றும் உங்கள் வானில் வளர்பிறையாய்...
அழகுநிலா...


Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்