கனடா வந்திறங்கிய இசைஞானி இளையராஜாவுக்கு டொரண்டோ தமிழர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு


கனடாவில் டொரண்டோ நகரில் நடக்கவிருக்கும் "எங்கேயும் எப்போதும் ராஜா" என்ற மாபெரும் இசை நிகழ்ச்சிகாக இளையராஜா அக்டோபர் 3அம் தேதி டொரண்டோ விமானநிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கனடிய தமிழர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.


இசைஞானி இளையராஜா அக்டோபர் 3ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் டொரண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த தமிழ் அமைப்புகள், இளையராஜாவின் டொரண்டோ வருகை மிகவும் சிறப்பானது என்றும் கருத்து தெரிவித்தனர். நவம்பர் 3ஆம் தேதி டொரண்டோவின்  Rogers Centreல் நடக்கவிருக்கும் மாபெரும் நேரடி இசை நிகழ்ச்சி நடக்கவிருப்பதால், அதுகுறித்த ஏற்பாடுகளை கவனிக்கவே இளையாராஜா தற்போது டொரண்டோ வந்துள்ளார்.


நவம்பர் 3ஆம் தேதி  Rogers Centre என்ற இடத்தில் நடக்கவிருக்கும் இசைநிகழ்ச்சியில் இளையராஜா மட்டுமல்லாது அவருடைய குடும்பம் முழுவதுமே கலந்து கொள்கிறது. யுவன்சங்கர்ராஜா,கார்த்திக்ராஜா மற்றும் பவதாரினி ஆகியோர்களும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்கள். பொதுவாக கனடாவின் மிகப்பெரிய அரங்கமான  Rogers Centreல் ஹாலிவுட் மற்ரும் சர்வதேச பாப் ஸ்டார்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிதான் நடைபெறும். ஆனால் முதன்முறையாக ஒரு தமிழரின் மாபெரும் இசை நிகழ்ச்சி இந்த அரங்கத்தில் நடைபெறுவதை தமிழர்கள் பெருமையாக கருதுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்களும் கலந்துகொள்கிறார் என்பது இன்னுமொரு சிறப்பு.
மேலும் இன்று (அக்டோபர் 4) Scarborough convention centreல் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் இசைஞானி இளையராஜா, நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. பின்னர் அக்டோபர் 6ஆம் தேதி மாலை மீண்டும் சென்னை திரும்ப இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைபாளர்கள் கூறினர்.

Comments

  1. படங்களுடன் பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்