திருப்பூரில் மலர் கண்காட்சி இந்த வார விடுமுறையை இப்படி கொண்டாடுங்கள்

     துவங்கியது நூகர்வோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் உணவு திருவிழா..

கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பூர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் வெகு சிறப்பான முறையில் நடந்து வரும் நுகர்வோருக்கான மாபெரும் கண்காட்சி இந்தமுறையும் திருப்பூர் காயத்ரி மஹாலில் வெகு விமர்ச்சையாக துவங்கியுள்ளது.

   முதல் முறையாக மலர் காண்காட்சியை திருப்பூர் மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார்கள். திருப்பூர் மக்கள் கண்குளிர கண்டு மகிழ வித விதமான மலர் அலங்காரம் வரிசையாய் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  பூக்களால் ஆன வண்ணத்துப் பூச்சியும், மிக பிரம்மாண்ட டைனோசரும் நிச்சயம் குடும்பத்துடன் வருபவர்களை குதுகலமூட்டும்.


2012, அக்டோபர் 5, 6, 7, 8 என நான்கு நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை CONSUMEX - 2012 நுகர்பொருள் கண்காட்சி நடைபெறுகிறது.


      திருப்பூர் மாநகர துணை மேயர் திரு. சு.குணசேகரன் அவர்கள் கண்காட்சி அரங்கத்தை திறந்து நிகழ்சியை துவங்கி வைத்தார். 

கிட்டத்தட்ட என்பதிற்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னனி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சந்திக்கின்றன. மளிகைபொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், அழகுசாதனபொருட்கள், பர்னிச்சர்கள் என்று ஓவ்வொரு அரங்கிலும் ஏராளமான பொருட்களை நிரப்பியுள்ளனர்.


     25000 க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் இந்த கண்காட்சியை கண்டுகளிப்பார்கள் என்பதால் கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும் சிறப்பு போட்டிகளையும் அறிவித்து பரிசளிக்கின்றார்கள். அதன்படி மெஹந்தி போட்டி, ரங்கோலி போட்டி, ஓவியபோட்டி மற்றும் சமையை போட்டி என திருப்பூர் பெண்கள், இல்லத்தரசிகள் என பலரும் ஆர்வமுடன் போட்டிக்கான முன்பதிவை செய்து வருகின்றனர். உங்களுக்கு போட்டியில் பங்கேற்க விருப்பம் இருப்பின் 9994506070 என்ற எண்ணில் திரு.பாலகிருஸ்ணனை தொடர்புகொள்ளுங்கள்.

உணவு திருவிழாவில் குடும்பத்துடன்  ரசித்துகொண்டே இந்த வார விடுமுறையை கழிக்க சரியான இடம்.

நுகர்வோர்களுக்கான விளிப்புணர்வை எற்படுத்த தேவையான தகவல்களை தொழிற்களம் குழுவுடன், கண்காட்சி அமைப்பின் தலைவர் திரு. வாசந்த் அவர்கள் அளித்து, முழு ஒத்துழைப்பையும்  கண்காட்சியை  பற்றிய பிற விபரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

இனி வரும் பதிவுகளில் நுகவோருக்கான விளிப்புணர்வு ஏனும் தலைப்பில் பார்ப்போம்..

கண்காட்சியில் நாம் ரசித்த புகைப்படங்கள் அடுத்த பதிவில்

தொழிற்களம் குழு

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்