இலவசமாய் கிடைக்கும் பயனுள்ள புரோகிராம்கள்


இலவசமாய் கிடைக்கும் பயனுள்ள புரோகிராம்கள்


இன்டர்நெட்தளத்தில் இலவசமாக நமக்கு பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றின் பயன்பாடுகள் பலவகையாகும். இலவச டிவி, ஆடியோ மற்றும் வீடியோ வசதி, கம்ப்யூட்டரில் ஆட்டோஹாட் கீ அமைப்பு என இவை பல்வேறு வகைகளாகும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்...

டவுன்லோட் மேனேஜர்:

இன்டர்நெட்டினை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் சராசரியாக நாறொன்றுக்கு ஒரு புரோகிராமையாவது டவுன்லோட் செய்கிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. எத்தனை வைரஸ் பயமுறுத்தல் இருந்தாலும் இலவசம் மற்றும் புதிய பயன்பாடு என்று தெரிந்தவுடன் அந்த புரோகிராமினை இறக்கிப் பார்க்கத்தான் மனசு துடிக்கிறது.இவ்வாறு டவுண் லோட் செய்திடும் புரோகிராம்களை பலர் தங்கள் கம்ப்யூட்டர் டிரைவ்களில் அப்படியே சாப்ட்வேர் ஸ்டோர் ரூம் தயார் செய்து வைத்துவிடுகின்றன. 45 சதவிகிதம் பேரே பயன்படுத்துகின்றனர்.

                                                 

இது போல் டவுன்லோட் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் இலவச டவுண்லோட் மேனேஜர் ஒன்று www.freedownloadmanager.com (fdm) என்ற முகவரியில் கிடைக்கிறது. இதில் டவுண்லோட் சம்மந்தப்பட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. டவுன்லோட் செய்யப்படும் புரோகிராமினை பிரித்து டவுண்லோட் செய்வது, ஒரே பைலுக்கு பல மிர்ரர்  பைல்களை உருவாக்குவது, யு-ட்யூட் போன்ற வீடியோ தளங்களிலிருந்து பிளாஷ் வீடியோக்களை டவுண்லோட் செய்வது இதற்கான பிட் டாரண்ட் சப்போர்ட் என இது தரும் வசதிகள் நீண்டு கொண்டே போகின்றன. 

டவுண்லோட் செய்யப்படும் புரோகிராம் ஸிப் பைலாக இருந்தால் அதில் என்ன என்ன பைல்கள் உள்ளன என்று பார்த்து நமக்கு தேவையான பைல்களை மட்டும் டவுண்லோட் செய்திடும் வசதி குறிப்பிட்டு சொல்லக் கூடியதாகும். இதனைப் பயன்படுத்தி டவுண்லோட் செய்தவர்கள் அளித்துள்ள கருத்துக்களை இந்த தளத்தின் சமுதாய தளப் பிரிவில் படிக்கலாம். மிகவும் பயனுள்ளவையாகவும் இந்த புரோகிராமினை புரிந்து கொள்ள கூடியதாகவும் உள்ளன. 

                              


அண்மையில் தரப்படும் இந்த fdm புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுவதுமாக ஸ்கேன் செய்து நீங்கள் வைத்துள்ள புரோகிராம்கள் அனைத்தும் லேட்டஸட் புரோகிராம்களா என்று சோதனை செய்து அப்படி இல்லை என்றால் அவற்றை அப்டேட் செய்வதற்கான வழிகளையும் தருகிறது. இதைப் போல இன்னொரு புரோகிராம் இன்டர்நெட்டில் கிடைக்கிறது. அதன் தள முகவரி www.orbitdownloader.com.ஆனால் fdm போல கூடுதலான வசதிகள் இதில் இல்லை.

நன்றி!!!

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போமா!!! 

கலந்தாய்வுகள்...

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்