என்ன படித்தால்!!! என்ன வேலை?


அனிமேஷன் படித்தால்...

மிகக் குறுகிய காலத்திலேயே மிகக் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது டிசைன்,மல்டி மீடியா மற்றும் என்டர்டெயின்மெண்ட் துறைகள். உலகெங்கிலும் அனிமேஷன் துறை வளர்ந்து வருவதைப் போலவே இந்தியாவிலும் இந்தத்துறை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அழகியலும்,கலை உணர்வும்,தொழில் நுட்பமும் இணையும் அனிமேஷன் துறை, இன்றைக்கு கோடிக் கணக்கான ரூபாய்கள் புரளும் துறை.

                                       

2டிஅனிமேஷன், 3டி மாடலிங் அண்ட் கிராஃபிக்ஸ், இமேஜ்  எடிட்டிங், ஆடியோ-வீடியோ எடிட்டிங், வெப் டிஸைனிங் அண்ட் அனிமேஷன், எஃபெக்ட்ஸ் அண்ட் விஷூவல் எஃபெக்ட்ஸ், ட்ரீம் வேவர், ஃபளாஷ்.3டி ஸ்டுடியோ மேக்ஸ் போன்று அனிமேஷன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் கற்றுக் தரப்படுகின்றன.அனிமேஷன் தொடர்பான மற்றொரு பிரபலபான பயிற்சி-மாயா.திரைப்படத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதில் மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

 •  ஒவிய அறிவு, வண்ணம், வடிவமைப்பு குறித்த கலை ஞானம் கம்ப்யூட்டர் மூலம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வம் உள்ள எவரும் அனிமேஷன்துறையில் இறங்கலாம்.
 •  பி.எஃப்.ஏ.,போன்ற நுண்கலைப் பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள் இன்னும் சிறப்பாக அனிமேஷன் துறையில் தங்களது முத்திரையைப் பதிக்க முடியும்.
 • கலை ஆர்வம் மிக்க பொறியியல் மாணவர்களும் இந்தப் படிப்புகளைப் படிக்கிறார்கள்.அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டி டியூட் ஆஃப் டிசைனில், டிசைன் தொடர்பான டிப்ளமோ படிப்புகளில் அனிமேஷன் கற்றுத் தரப்படுகிறது.
 • அனிமேஷன் துறையில் எல்லைகள் விரிந்து வருகின்றன.விளம்பரத் துறையிலும் அநேக வேலை வாய்ப்புகள் உள்ளன.தொலைக்காட்சி நிறுவனங்கள்,வீடியோ கிராஃபிக்ஸ் மையங்கள் ஆகியவற்றிலும் வேலை கிடைக்கும்.
 • வீடியோ கேமிங் துறை வளர்ந்து வரும் முக்கியத் துறைகளில் ஒன்று.2009 ஆம் ஆண்டில் இந்திய வீடியோ கேமிங் தொழில் துறை 300 மில்லியன் டாலரை எட்டும் என்று கணக்கிட்டு ள்ளார்கள் தொழில் வல்லலுநர்கள். எனவே அனிமேஷன் பயிற்சி பெற்றவர்களுக்கு இத்துறையில் நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது.
 • கல்வி தொடர்பான இன்டராக்டிவ் சி.டி.க்களை உருவாக்குவதிலும் அனிமேஷன் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.
                                               1                                          
 • வெப் டிஸைனர்களாகவும் கிராஃபிக் டிஸைனர்களாகவும் கூட ஆக முடியும். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்ட்ரீரியர் டிஸைன் துறைகளிலும் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.
 • மருத்துவம்,தொழில் மற்றும் பாதுகாப்புத் துறைகளிலும் அனிமேஷன் தொழில் நுட்பத்தின் பயன்பாடு உள்ளது.
 • நம் நாட்டில் 300 க்கும் மேற்பட்ட அனிமேஷன் ஸ்டுடியோக்கள் உள்ளன. எனவே, அனிமேஷன் துறைகளில் படித்த திறமையாளர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

நன்றி!!!

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போமா!!!

கலந்தாய்வுகள்...

Comments

 1. நன்றி நண்பரே.உங்களது வலைப்பூ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  ReplyDelete
 2. பலருக்கும் உதவும் பகிர்வு...

  நண்பர்களிடம் பகிர்கிறேன்... நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்