Ads Top

பேஸ்புக் - முதல்பக்கம் (அத்தியாயம்-1)


மிஸ்டர் மார்க் ஷக்கர்பெர்க், 

ல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான புகைப்படங்களை திருடிய குற்றத்திற்காகவும், அந்த படங்களை உங்கள் சொந்த உபயோகதிற்கு பயன்படுதியமைக்காகவும், கல்லூரி இணைய செயல்பாட்டை முடக்கி இயங்கவிடாமல் செய்தமைக்காகவும், தனிப்பட்ட நபர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் புகைப்படங்களை விளையாட்டுப் பொருட்களாக மாற்றியமைக்காகவும் கல்லூரி நிர்வாகம் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளது. கல்லூரி ஒழுங்குக் கமிட்டியின் முன்பு ஆஜராகி உங்கள் தரப்பை விளக்க வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவிடுகிறது. 

- ஹார்வர்டு பல்கலைக்கழகம் மார்க் முதல்முறையாக எதிர்பார்ப்பையும் எதிர்ப்பையும் ஒருசேர சம்பாதித்த தருணம் இது. அதற்க்குக் காரணி அவருடைய பேஸ்மேஷ் என்னும் மென்பொருள். பேஸ்புக்கிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததும், இன்றைய உலகமே இணையத்தில் இணைந்திருக்கக் காரணமும் பேஸ்மேஷ் என்னும் மென்பொருள் தான். மார்க் ஷக்கர்பெர்க் மற்றும் அமெரிக்க கல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரையில் பேஸ்புக் என்பது புதிய வார்த்தை இல்லை. தங்கள் அன்றாட கல்லூரி வாழ்கையில் பேஸ்புக்கை சந்திக்காமல அவர்கள் கடந்தது இல்லை. அமெரிக்கக் கல்லூரிகளில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள ஒவ்வொரு கல்லூரியும் பேஸ்புக் என்னும் புத்தகத்தை வெளியிடுவார்கள், அதில் அந்த கல்லூரி மாணவரின் தகவல்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு எண் என்று அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆரம்பகாலத்தில் அச்சுப் புத்தமாக வெளிவந்த பேஸ்புக் பின்னாளில் டிஜிடலாகவும் மாறியிருந்தது. இந்த டிஜிடல் வடிவ பேஸ்புக்கிலிருந்து தான் இன்றைய தினத்தில் உலகமே உபயோகம் செய்யும் கமர்சியல் பேஸ்புக்கிற்கான விதை போடப்பட்டது. 

                         

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்பது விடுதிகள் இருந்தன. அதில் ஒவ்வொரு விடுதிக்கு என்றும் தனித் தனி பேஸ்புக் உண்டு. மார்க் இருந்த விடுதியின் பெயர் கிர்க்லேன்ட் ஹவுஸ். இந்த விடுதியில் இருக்கும் மார்க்கின் அறை தான் அவரது ஆய்வுக்கூடம், அனைத்து செயல்முறைப் பயிற்சிகளும் இங்கிருந்தே ஆரம்பமாகின. அப்படி நடைபெற்ற ஒரு சோதனை முயற்சி தான் பேஸ்மேஷ். அதன் வெற்றி அவரை அழைத்துச் சென்ற இடம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு கமிட்டி அறை. 

ன்றைய இணைய உலகத்தில் மிகவும் கவர்சிகரமான பொழுதுபோக்கு விளையாட்டு "பேஸ்மேட்ச்" அல்லது "ஹாட் ஆர் நாட்". உங்களுக்குப் பிடித்த சில பிரபலங்களை நினைவில் கொள்ளுங்கள், அவர்களின் பெயர் A B C மற்றும் D. இந்த விளையாட்டை தொடங்கும் பொழுது A மற்றும் Bயின் முகம் திரையில் தெரியும், அதில் உங்கள் மனதிற்கு பிடித்த ஒரு பிரபலத்திற்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் வோட்டு Aக்கு என்றால், B மறைந்து C தோன்றும் A அப்படியே இருக்கும். இப்பொழுதும் உங்கள் வோட்டு Aக்கு என்றால், C மறைந்து D தோன்றும். கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் உலகம் முழுவதும் தங்களுக்கு பிடித்த பிரபலத்திற்கு வாக்களிக்கும், இறுதியில் யார் முதல் இடம் என்று தெரிவிக்கும். தங்களுக்குப் பிடித்த பிரபலம் முதலிடம் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் மொத்த இணையமும் போட்டி போடும். அந்த காலத்தில் பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்த விளையாட்டில் தான் தங்கள் அதிக நேரத்தைக் களித்தார்கள். 


 

அக்டோபர் 28, 2003 அன்று மார்க் சிறிது குடித்திருந்தார். அந்தி சாய்ந்த இருள்வேளை மனம் முழுவதும் எரிச்சலும் கோபமும், அதற்கான காரணம் ஒரு பெண். பெண்? ஆம் ஒரு பெண். பேஸ்மேஷ் மற்றும் பேஸ்புக் இரண்டின் தொடக்கமும் ஒரு பெண்ணிலிருந்தே. மார்க்கைப் பொறுத்த வரையில் எதாவது ஒரு விசயத்தில் தன்னை ஈடுபடுத்தி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பார். அவரது மனம் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவரது மனம் எந்நேரமும் எதாவது ஒரு அல்காரித மொழியுடன் பேசிக் கொண்டே இருக்கும். ஒரு விசயத்தில் முடிவெடுத்து விட்டால் அதனுடன் பயணிக்க ஆரம்பித்துவிடுவார். அன்றும் அப்படித்தான் எரிச்சலின் உச்சத்தில் இருந்த மார்கிற்கு வேறு எதிலாவது தன் சிந்தனையை செலுத்த வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார். 

மக்கெல்லாம் ரிலாக்ஸ்ஷேசன் மன நிம்மதி வேண்டும் என்றால், செய்யும் வேலையிலிருந்து நம்மை விடுவித்து பொழுது போக்குகளில் மனதை செலுத்துவோம். மார்க்கும் அப்படித்தான், இங்கு வித்தியாசப்படுவது அவருக்கும் நமக்குமான பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. கல்லூரியில் படிக்கும் காலத்தில் படிப்பு தவிர்த்து பொழுதுபோக்காக பல்வேறு விதமான ப்ரோஜெக்ட்டுகளை சக மாணவர்களுக்கு செய்து கொடுப்பார். சிலவற்றை பணத்திற்காகவும் சிலவற்றை மன நிம்மதிக்காகவும் செய்வார். இந்த ப்ரோஜெக்ட்டுகளை செய்வதற்கு அவர் தேர்ந்து எடுத்த நேரம் அவருடைய பொழுதுபோக்கு நேரம் அல்லது அவரது பாடவேளைகளுக்கும் தூக்கத்திற்கும் இடையிலான பல மணி நேரங்கள். மார்க் தூங்குவது சில மணி நேரங்களே ஏனைய நேரம் முழுவது அவர் மனதில் லயித்திருப்பது எதாவது ஒரு விதமான ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட்.ங்கள் மனதில் A B C D யின் இடத்தில உங்களுக்குப் பிடித்த நடிகர்களை  
(உம் : ரஜினி கமல் அஜித் விஜய்) வைத்து பேஷ்மேட்ச் ஆட்டத்தை ஆடிப்பாருங்கள், ஏன் பல இளைஞர்களும் தங்களுக்குப் பிடித்த பிரபலத்தை முன்னிலைப் படுத்த ஓயாமல் வாக்களித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது புரியும். இதே போன்ற அல்லது இதே விளையாட்டிற்கு வேறு முகம் கொடுத்தவர் தான் மார்க். இந்த பேஷ்மாட்சை அடிப்படையாகக் கொண்டு உருவான விளையாட்டிற்கு மார்க் வைத்த பெயர் தான் பேஷ்மாஷ். தன்னிடம் இருந்த எரிச்சலை திசை திருப்ப வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்த நேரம் மார்க்கின் கணினியில் திறந்திருந்த தளம் கிர்க்லேன்ட் ஹவுசின் பேஸ்புக். அதில் இருந்த புகைப் படங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மார்க். இந்த நேரத்தில் மார்க் முகத்தில் ஒரு பிரகாசம் பல நாள் தேடிக் கொண்டிருந்த ஒரு புதிருக்கான விடை கணப் பொழுதில் தான் மனக்கணினியில் வந்து சென்றது போன்ற உணர்வு. சிந்தனை முழுவதையும் கிர்க்லேன்ட் பேஷ்புக்கில் செலுத்தத் தொடங்கினார்.

மார்க்கிற்கு ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. தான் பார்க்கும் எந்த ஒரு நபரையும் எதாவது ஒரு விலங்குடன் பொருத்திப் பார்ப்பது, பின்பு அதை நினைத்து நினைத்து சிரிப்பது அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டலடிப்பது. தான் கணினியில் திறந்திருந்த கிர்க்லேன்ட் ஹவுஸ் பேஸ்புக்கைப் பார்த்தவருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. நம்மைப் போல் பலரும் மற்றவர்கள் முகத்தை கிண்டலடிக்க நினைப்பார்கள், அதனால் அனைவரது புகைப்படத்தையும் இணையத்தில் ஏற்றி அதன் அருகில் அவரைப் பற்றி எழுத சிறு இடம் கொடுக்க வேண்டும். ஒருவரது முகத்தைப் பார்க்கும் பொழுது என்னவெல்லாம் எழுதத் தோன்றுகிறதோ எழுதட்டும். அதனை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நிற்க, ஒருவரது புகைப்படத்தை மற்றவர்கள் பார்க்கும் பொழுது "அழகாய் இருக்கிறாய்"," உன் முகம் இன்று பொலிவுடன் இருக்கறது" என்பது எழுதக் கூடாது. "உன் முகம் கொரில்லா போல் இருக்கிறது", "உன்னை விட காட்டெருமை கூட அழகாய் இருக்கும்" என்பது போன்ற வாசகங்களைத் தான் மற்றவர்கள் எழுத வேண்டும் என்று மார்க் நினைத்தார்.

                                       

ந்த எண்ணத்தை தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட மார்க் அவர்களின் விருப்பத்தையும் கேட்டார். இங்கு மார்க்கின் நண்பர்கள் சிறிது வேறுபட்டு நின்றார்கள். பேஸ்புக்கிற்கான ஆழமான சோதனையோட்டம் நடைபெற இருக்கிறது காத்திருங்கள் அடுத்த பதிவு வரைக்கும். 

முதல் நன்றி :
தொடர் எழுத வாய்ப்பும் ஊக்கம் வழங்கிய மக்கள் சந்தை மற்றும் தொழிற்களம் குழுவினருக்கு நன்றிகள் 


அறிமுகம் :
தற்பொழுது திடங்கொண்டு போராடு என்னும் வலைப்பூவில் எழுதி வருகிறேன். எனது வலைபூ முகவரி : seenuguru.com விண்ணப்பம் :

இது என் முதல் தொடர். எதாவது ஒரு இடத்தில எதுவும் தகவல்கள் பொருந்திப் போகாமல் இருப்பின் தயவு செய்து தெரிவியுங்கள் திருத்திக் கொள்கிறேன், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை பேஸ்புக் தொடர் வெளிவரும். உங்கள ஆதரவையும் அறிவுரைகளையும் எதிர்பார்த்து... 20 comments:

 1. பேஸ்மேஷ் என்பதை ஒவ்வொருமுறையும் பேஸ்ரமேஷ் என்றே படித்தேன்!!
  மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லி வருகிறீர்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 2. enakku puthiya thakaval....

  thodarungal...

  ReplyDelete
 3. அறியாத தகவல் அடங்கிய மிக நல்ல பதிவு சீனியின் பதிவு என்றால் தைரியமாக படிக்க வரலாம் . பாராட்டுக்கள் சீனி

  ReplyDelete
 4. சீனு அருமை... மார்க் பற்றிய தேவையான குறிப்புகள் எடுத்து வத்துக்கொண்டே தொடரை ஆரம்பித்து இருப்பாய் என்று நம்புகிறேன். பலருக்கு இது புது தகவல்களாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. வாழ்த்துகள். :-)))

  இந்தப் பதிவு படித்தவுடன், என் மனதினுள், உனது உருவத்தை ஒரு அழகான விலங்குடன் ஒப்பிட்டு பார்த்து இன்னும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் அதை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை, இனியும் சொல்லமாட்டேன்... :-)))))

  ReplyDelete
 5. ஏப்பா சீனு கலக்குற சூப்பர் ஆக இருந்தது ஆனால் எனக்கு தான் facebook புடிக்காது ட்விட்டர் தான் பிடிக்கும்,,,,,ட்விட்டர் பற்றி அடுத்தது எழுதவும்

  ReplyDelete
 6. வழக்கம் போல அழகாகவே எழுதியிருக்கீங்கண்ணே... அடுத்த புதனுக்கு வெயிட்டிங்.

  The Social Network படத்திலும் நீங்க சொன்ன பல விடயங்கள் வரும். பார்த்திருக்கவில்லை என்றால் பாருங்க (அனேகமா பார்த்திருப்பீங்க)

  ReplyDelete
 7. முதல் பகுதியே பிரமாதம் நண்பா! இதுவரை அறிந்திராத தகவல்களை உங்கள் எழுத்து நடையுடன் சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். அடுத்தப் பகுதிக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. தகவல்களுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. கலக்குறே சீனு......பின்புலத்தில் உனது உழைப்பு தெரிகிறது....இன்னும் இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துகிறேன்....கவனமாக தகவல்கள் சேகரித்து எழுதவும்..பின்னாளில் புத்தகமாக படிக்கலாம்...

  ReplyDelete
 10. Super cheenu. Nallarukku. Vaalthukkal. My site: http://newsigaram.blogspot.com

  ReplyDelete
 11. அருமையான ஆரம்பம். தொடருங்கள். நாங்களும் தொடர்ந்து படிக்கிறோம்.
  பேஸ் புக் பற்றி பலவிதமான கருத்துக்கள் - நம் அந்தரங்கத்தில் அளவுக்கு மீறி தலையிடுவதாக - நிலவுகின்றன.

  எல்லாவற்றிற்கும் உங்கள் தொடர் விளக்கங்களை கொடுக்கட்டும்.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 12. சிறப்பான பகிர்வு தொடருங்கள் சகோ தொடர்கிறோம்.

  ReplyDelete
 13. நல்ல தொடரை ஆரம்பித்திருக்கிறாய் அன்பு சகோதரா..இதற்காக நிறைய தேடலை மேற்கொண்டிருப்பாய் எனத் தெரிகிறது..தொடர் வெற்றியடைய வாழ்த்துகள்..சிறப்பானதொன்றாய் அமையட்டும்..

  ReplyDelete
 14. மிகவும் பிரபலமான பேஸ் புக்கை பற்றிய சுவையான வரலாறு! ஆரம்பமே அசத்தல்! தொடர்ந்து எழுதவும் படிக்க காத்திருக்கிறேன். மிக்க நன்றி!

  ReplyDelete
 15. நல்லதொரு விளாக்கமான அவசியமான பதிவு. தொடருங்கள்..., காத்திருக்கிறேன்..,

  ReplyDelete
 16. நல்ல துவக்கம்..அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 17. நல்லதொரு ஆரம்பம்... தொடர்கிறேன்...

  ReplyDelete
 18. நல்ல பதிவு சகோ தொடருங்கள்

  ReplyDelete
 19. ஃபேஸ் புக் பற்றி தமிழில் படிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஏனென்றால் எனக்கு ஆங்கிலம் தெரியாது. இந்த தொடர் எனக்கு விருந்தாய் அமைகிறது..

  இந்த அறிய தொடரை எழுதும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் .. எழுத்து நடையும் நன்றாக உள்ளது.

  இந்த தொடரை எனக்கு அவரது தளத்தில் அறிமுகம் செய்த பளாக்கர் நண்பன் அப்துல் பசித் அவர்களுக்கு நான் கடமைப்பட்டவனாகிறேன். நன்றிங்க.........

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.