ஃபேஷன் ஃபேஷன்
                                        
இன்றைய இளைஞர்களின் மந்திரச் சொல் ஃபேஷன். டெய்லர்கள் தைத்த ஆடைகளிலிருந்து மெல்ல டிசைனர் ஆடைகளுக்கு மாறி வருகிறது இளைஞர் பட்டாளம். புதிய டிசைன்களிலான நவீன உடைகள்தான், இன்றைய இளைய தலை முறையின் அடையாளம். இதன் காரணமாக ஃபேஷன் டிசைனிங் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. 2010 ஆம் ஆண்டில் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு ஃபேஷன் துறை இருக்கும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். இத்துறையிலும், இது தொடர்பான துறைகளிலும் மூன்று கோடி பேருக்கு மேல் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                           

ரசனை, கற்பனை, கலைத்திறன், துணிகளின் தரத்தைக் கண்டறிவதில்  ஆழ்ந்த அறிவு, எந்தத் துணி எந்த விதமான உடையை வடிவமைப்பதற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை நிர்ணயிக்கும் நுண்ணறிவு, எந்த வண்ணம் எதற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் கலை உணர்வு, காலத்துக்கு ஏற்றபடி புதிய புதிய டிசைன்களை உருவாக்கும் படைப்பாக்கத் திறன், நினைத்த டிசைன்களை கோட்டுச் சித்திரங்களாக வரைந்து காட்டும் ஒவியத்திறன், மாறி வரும் ஃபேஷன் டிரெண்டுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதில் ஆர்வம் போன்றவை இருந்தால், இத்துறையில் யாரும் முத்திரை பதிக்கலாம்.   

                                                                

  • ஃபேஷன் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களில் பெரும் பாலானவர்களுக்கு கேம்பஸ் இன்ட்ர்வியூ மூலம் வேலை கிடைத்து விடுகிறது. ரேமண்ட், பாம்பே டையிங், அர்விந்த் மில்ஸ், கோகுல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், எஸ்.பி.இன்டர்நேஷனல், ஐசக்ஃபேஷன்ஸ் என்று வேலை தரும் நிறுவனங்களின் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
  • சில இலட்ச ரூபாய் முதலீட்டில் தனியாக பொட்டீக் அமைப்பவர்களும் உண்டு. சிறிது கால அனுபவத்துக்குப் பிறகு, சொந்தமாக டிசைன் ஸ்டுடியோ வைத்துக் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் உண்டு.
  • லைஃப் ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப், மார்க்ஸ் ஆண்ட் ஸ்பென்சர்ஸ், வால்மார்ட், கேமார்ட் போன்ற பிரமாண்டமான ஷோரூம்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் உருவாகி வருவதால் ஃபேஷன் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
  • ரீடெய்ல் துறை வேகமாக வளர்ந்து வருவதால் இந்தத் துறையிலும் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகள் உள்ளன.
  • நிஃப்ட் மையங்களிலிருந்து படித்து வெளியேறிய 5,000 மேற்பட்ட மாணவர்கள்,   ஃபேஷன் டிசைன் துறைகளில் பிராண்ட் மேனேஜர்கள், குவாலிட்டி கண்ட்ரோலர்கள், புரொடக்‌ஷன் மேனேஜர்கள், ஃபேஷன் கோ ஆர்டினேட்டர்கள், மார்க்கெட்டிங் மேனேஜர்கள் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வருவதோடு, இலண்டன், பாரீஸ், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய ஃபேஷன் மையங்களில் தங்கள் நவீன டிசைன்களைக் காட்சிக்கும் வைத்திருக்கிறார்கள்.  

நன்றி...

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போமா!!!
கலந்தாய்வுகளுடன்...Comments

  1. மாணவர்களே கவனிக்கவும்,இன்றைய தேவைகளுக்கு ஏற்ற பதிவு.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்