முதலுதவி


முதலுதவி
                                     
    குழந்தைகள் பள்ளியில் இருக்கும் பொழுது, விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் சமயத்தில்,அவர்களில் சிலருக்கு விபத்துக்களும் காயங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.பெரும்பாலானவை சிறிய விபத்துக்களாகவே இருக்கும். உதாரணமாக, வெட்டுக்காயங்கள் சுளுக்கு முதலியவைகளை உடனடியாக கவனித்து எளிதில் சிகிச்சை செய்ய முடியும்.

First_aid : First aid kit, syringe and stethscope. 3d Stock Photo
எப்போதாவது விபத்துக்கள் மிகவும் ஆபத்தானவையாக அமைந்தால் உடனடியாக சிகிச்சை செய்ய இயலாமல் போய்விடும். எடுத்துக்காட்டாக எலும்பு முறிவு ஏற்பட்டால், நீரில் மூழ்கினால், அல்லது பாம்பு கடியால் பாதிக்கப்பட்டால், ஆசிரியர்களாகிய நீங்கள்தான் பள்ளியில் நடக்கும் விபத்துக்களை நேரடியாக கண்டறியவும் மருத்துவரோடு தொடர்பு கொண்டு உதவவும் முதல் நபராக இருப்பீர்கள்.

                                               First_aid : Fitness trainer fixing arm joint of woman with bandage

 அந்த அவசரமான நேரங்களில் முதல் உதவிகளை எவ்வாறு அளிப்பது என்பது பற்றி நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ளுதல் வேண்டும். எல்லா அவசரமான நிலைமைகளிலும் முதலுதவிகளை அளித்த பிறகு நீங்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கவும்.

 குழந்தைகளை உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயல வேண்டும்.

 கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் உதவி குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.
 • வேகமாகவும், நிதானமாகவும், முறையாகவும் செயல்படுதல் வேண்டும்.
 • அதி அவசரமான நிலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 • ஒருவருக்கு சுவாசம் நின்றுவிட்டால் அல்லது குறைந்தால் வாயோடு வாய் வைத்து சுவாசம் மேற்கொள்ளவும் அல்லது வேறு முறைகளை கையாளவும்.
 •  இரத்தப்போக்கை நிறுத்துதல் வேண்டும்.
 •  காயம்பட்ட குழந்தைக்கு தைரியம் அளித்து பயத்தை போக்குதல் வேண்டும்.
 • அதிர்ச்சிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
 • குழந்தையை மருத்துவ உதவிக்கு எடுத்து செல்லுமுன் காயங்கள் அல்லது எலும்பு முறிவுகளை அசையா முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 • அவசியத் தேவை என்றால் தாமதிக்காமல்குழந்தையை ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பாதுகாப்பான வசதிகளை செய்து தர வேண்டும்.
 •  கடைபிடிக்க வேண்டிய கவனிப்புகள் - 
                    1. சுவாசத்தின் ஏற்ற இறக்க விகிதம்
                    2. முகத்தின் நிறம் மற்றும் தோலின் வெப்ப நிலை.
                    3. காது,மூக்கு,வாய் ஆகியவற்றில் உண்டாகும் இரத்தப்போக்கு
  • உங்கள் வசதிக்கு அதிகப்படியான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
  • விபத்துக்குள்ளான நபரை சுற்றி கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் முதலுதவி அளிப்பதற்கு தடையாக இருக்கும்.மேலும் இது நோயாளிக்கு கவலையையும் கூச்சத்தையும் உண்டாக்கும். மனக் கலக்கத்தைத் தரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். சுத்தமான சுவாசக் காற்று தடைபடும்.
  • அவசியமில்லாமல் உடைகளை அகற்ற வேண்டாம்.
  • நினைவிலந்த நிலையில் இருக்கும் போது வாய்வழியாக எந்த திரவ கரைசலையும் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது.ஏனென்றால் உள்காயங்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது சிறிது நேரத்துக்கு மயக்கநிலை தேவைப்படலாம்.
  முதலுதவி பற்றிய விழிப்புணர்வு நம் அனைவருக்கும் கட்டாயம் தேவை. அடுத்த பதிவில் மேலும் பல விபரங்களை தெரிந்து கொள்ளலாம்...

  நன்றி...

  என்றும் வானில் வளர்பிறையாய்...
  அழகுநிலா...


  Comments

  1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...

   நன்றி...

   ReplyDelete

  Post a Comment

  உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்