வரலாற்று நிகழ்வுகள் - முதல் உலகப் போர்...


முதல் உலகப்போர்

குடியேற்றக் கொள்கை என்பது ஒரு நாடு தனது இறைமையைதன் எல்லையைக் கடந்து பிற பகுதிகளின் மீது செலுத்துவதாகும். குடியேற்றங்களை ஏற்படுத்துபவர்கள் பொதுவாக,தாங்கள் குடியேறிய பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள்,தொழிலாளர் திறன்,சந்தைகள் போன்றவற்றின்மீது ஆதிக்கம் செலுத்துவர்.மேலும்,தங்களின் சமூக பண்பாட்டுக் கூறுகள்,சமய மற்றும் மொழி ஆகியவற்றை குடியேற்றங்களில வாழும் மக்களின் மீது திணிப்பார்கள்.

                                                       

குடியேற்ற   நாடுகளின்மீது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவது பேராதிக்கம் எனப்படுகிறது.புதிய சந்தைகளும்,கச்சாப் பொருட்களும் இக்காலத்தில் பேராதிக்க நாடுகளுக்கு தேவைப்பட்டன என்பதை இது உணர்த்துகிறது.

தொழிற்புரட்சியின் விளைவாக,ஐரோப்பிய நாடுகள் தங்களது உற்பத்தி பொருட்களுக்கான புதிய சந்தைகளைத் தேடவேண்டி வந்தது. அதேபோல், அவர்களது தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருட்களும் தேவைப்பட்டன. இத்தகைய இரட்டைத் தேவைகளினால்,ஆசியா,ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பகுதிகளில் அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டன.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது.நீராவிக்கப்பல்கள்,      
ரயில்பாதைகள், சாலைகள் மேம்படுத்தப்பட்டன.வெல்லப்பட்ட நாடுகளின் மீது பேராதிக்கம் நன்கு வலுப்படுவதற்கு இவை பேருதவியாக அமைந்தன.

                                             


பல நாடுகள் பிறமக்களைவிட தாமே உயர்ந்தவர் என்ற உயர்வு மனப்பாங்கை வளர்த்துக் கொண்டன.தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்ளவும்,வலிமையை பெருக்கிக் கொள்ளவும் மேலும் குடியேற்றங்கள் தேவை என்பதை அந்த நாடுகள் உணர்ந்தன.

ஐரோப்பியர் பலரின் எண்ணத்தில் பேராதிக்கத்தின் விரிவாக்கம் என்பது ஒரு புனிதச் செயலாகவே இருந்தது.உலகின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களை நாகரீகப்படுத்தும் வழியாகவே அவர்கள்  பேராதிக்கத்தைக் கருதினர்.புதிய நிலப்பகுதிகளைக் கண்டறிந்தவர்கள், சமயப் பரப்பாளர்கள் ஆகியோர் பேராதிக்கத்தை பரப்புவதில் பங்கேற்றனர்.

முதல் உலகப்போருக்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம்.                                                                ரகசிய ஒப்பந்தங்களை செய்துகொள்ளும் முறையே அவற்றில்  முக்கியமானதாகும்.

இனி வரும் பதிவுகளில், வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை காணலாம்...

நன்றி,

என்றும் உங்கள் மனதில் வளர்பிறையாய்...
அழகுநிலா...

Comments

  1. விளக்கம் அருமை... தொடருகிறேன்... நன்றி...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்