நெடுந்தூரம் பறந்து செல்லும் பறவைகள, வழி தவறாமல் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு எவ்வாறு திரும்புகின்றன ?


 நெடுந்தூரம் பறந்து செல்லும் பறவைகள, வழி தவறாமல் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு எவ்வாறு திரும்புகின்றன ?

                                             Flying_bird : Male Eastern Bluebird (Sialia sialis) in flight

 தங்கள் இருப்பிடத்தை விட்டு வெகுதூரம் பறந்து செல்லும் பறவைகள் சூரிய ஒளி, காற்றின் திசை இவற்றைக் கொண்டே தாங்கள் பயணித்த பாதையை அடையாளம் கண்டு கொள்வதாக வெகுநாட்கள் நம்பப்பட்டு வந்த்து. இதில் ஒரளவு உண்மை இருப்பினும், நெடுந்தொலைவில் இருக்கும் தங்கள் இருப்பிடத்திற்கான சரியான பாதையை அடையாளம் காண பறவைகளுக்கு வேறொரு ஆற்றலும் உள்ளது. அதாவது, பூமியின் காந்தப் புலனை (Earth's magnetic field) அடியும் ஆற்றலாகும்.

                                              birds flying

 பறவைகளின் மூளையில் காந்தப்புலனைக் கொண்டு வழியை அறிந்து கொள்ளும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி ஏரோபிளேனில் அமைந்துள்ள வழி அறியும் கருவிபோல (Compass) செயல்படுகிறது. இது பூமியின் காந்த விசையை    பறவைகளுக்கு உணர்த்தி, தான் பயணித்து வந்த நெடுந்தூரத்தை வழி மாறாமல் சென்றடைய உதவுகிறது

 பூமியின் காந்த விசையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து விட்டால் பறவைகள் தங்கள் வழியைக் கண்டுப்பிடிக்கத் தடுமாறும் என்ற உண்மையும் ஆராய்ச்சில் கண்டறிதப்பட்டுள்ளது.

 1998 ஆம் ஆண்டு, சூரியனின் மேற்பகுதியில் ஏற்பட்ட வெடிப்பினால் பூமியின் காந்த விசையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. அப்போது பிரான்ஸ் நாட்டிலிருந்து தெற்கு இங்கிலாந்துக்குப் பறந்து சென்ற ஆயிரக்கணக்கான பறவைகள்,தங்கள் வழியை கண்டறிய இயலாமல் திசைமாறிச் சென்றது இதற்கு உதாரணமாகும்.

நன்றி!!!

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போமா!!!

கலந்தாய்வுகள்...

Comments

  1. Ithu ponra pathivai naan inge erkkanave virivaga veliyittullen.

    ReplyDelete
  2. அறிந்துகொண்டேன். நன்றி!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்