நமது அடிப்படை கடமைகள் - 11


அடிப்படைக் கடமைகள் (விதி51A)

ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உரிய அடிப்படைக் கடமைகள் 1976-இல் செய்யப்பட்ட 42-ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம் ஸ்வரண்சிங் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் பகுதி-IV A-இல் வரையறுக்கப்பட்டன.
                                                                  
                                                           1. அரசியலமைப்பை ஏற்றல்,தேசியக்கொடி,தேசியக்கீதத்திற்கு மரியாதை செலுத்துதல்.
 2. விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்த உன்னத லட்சியங்களைப்  பேணுதல்.
 3. இந்தியாவின் இறையாண்மையை ஏற்று ஒருமைப்பாட்டையும் ஒன்றுபட்ட உணர்வையும் வளர்த்தல்.
 4. நாட்டின் பாதுகாப்பு,தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல்.
 5. ஜாதி, மத, இன, மொழி வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை கண்டு சகோதரத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் காத்தல்.
 6. இந்தியாவின் பண்பாட்டுப் பெருமைகளைப் பேணிக் காத்தல்.
 7. சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாத்தல், ஏரி, குளம், கிணறுகளை மாசுபடாது காத்தல் மற்றும் வனம், வனவிலங்குகள், பறவைகள், உயிரினங்களைப் பாதுகாத்தல்.
 8. தொழில், விஞ்ஞானம், விவசாய ஆய்வுகளைப் பரப்புதல்,மனித நேயம் வளர்த்தல்.
 9. பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்,வன்முறைகளைத் தவிர்த்தல்.
 10. இந்த நியதிகளனைத்தையும் கடைபிடித்து நாட்டு முன்னேற்றத்தில் அக்கறைக் காட்டுதல்.
 11. 6 வயது முதல் 14 வயது வரை தம் பிள்ளைகளை கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புதல் (இது 2002-ஆம் ஆண்டு, 86-ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது).
இந்தியனாய் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் இந்த 11 அடிப்படை கடமைகளை தவறாமல் பேணிக்காக்க வேண்டும். நமது முன்னோர்கள் பாடுபட்ட பெற்று தந்த சுதந்திரத்தை பேணிக்காப்போம்...

நன்றி!!!

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....

மீண்டும் அடுத்த பதிவில் சாந்திப்போமா!!!
கலந்தாய்வுகளுடன்...

Comments

 1. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள்...

  நன்றி...

  ReplyDelete
 2. this is most important factors for follow all the indians..... thank you

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்