முழுச்சிக்கோ கண்ணா!! - கூகுளின் ஒமிட்டேட் ரிசல்ட்

     தேடுபொறிகளில் கூகுளை மிஞ்சும் வகையில் எந்த நிறுவனத்துடனும் போட்டி போட முடியாது என்கிற நிலைமையே நிலவி வருகிறது. அந்த வகையில் தேடு என்ற ஒற்றை வார்த்தையை எத்தனை எத்தனை கோணங்களில் கூகுள் பார்க்கிறது என்பதே அதன் வெற்றிக்கான முதல் காரணம்.

உங்கள் உழைப்பு மற்றும் உங்கள் கவனம் இதுவே உங்கள் வெற்றியை உறுதி செய்கிறது என்பதற்கு கூகுள் சிறந்த உதாரணம்.

சரி, விசயத்திற்கு வருவோம்.

      காப்பி, பேஸ்ட் என்று மற்ற தளங்களில் உள்ளவற்றை அப்படியே பிரதி எடுத்து    போடுவதால் பலன் பூஜ்ஜியம் என்பதை கூகுள் உணர்த்தி வருகிறது.

பெரும்பாலும் ஆட்சென்ஸ் போன்ற கணக்கு விசயங்களுக்காக ஒமிட்டேட் ரிசல்ட் என்ற தவிர்கப்பட்ட முடிவுகள் செயல்பாடு பயன்படுகிறது.

உங்கள் தளத்தின் தர வரிசை கூகிளின் தேடுபொறியில் முன்னோக்கி வரனும்னா இனி பிரதி எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

காரணம், பிரதி எடுக்கப்பட்ட தள முடிவுகளை தேடுபொறியில் கூகுள் காண்பிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தி வருகிறது

உங்கள் பதிவை பலரும் பிரதி மூலம் பகிர்ந்து விடுகிறார்களா  கவலையை விடுங்கள். இதன் மூலம் உங்கள் தளத்தின் தர வரிசை குறையாது. கீழே படத்தை பாருங்கள். 

முதல் படம், தேடுதலின் போது அசல் தளத்தை முதலில் காண்பிக்கிறது. தேவைப்பட்டால் மட்டுமே, If you like, you can repeat the search with the omitted results included. என்பதை சொடுக்கி சம்பந்தப்பட்ட பிரதி தளங்களை பார்க்கும் படி கூகுள் அமைத்துள்ளது

படம் 1.0
படம் 1.1
         ஒரே மாதிரியான வெளியீடுகளை கூகுள் தேடலில் பார்க்கும் பொழுது தனது பயனர்கள் சலிப்படைகிறார்கள் என்பதை கூகுள் எண்ணுகிறது. 

போக போக சுத்தமா கத்தரிக்கோலையும் தூக்கி கொண்டு கூகுள் வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

பிரதி பதிவர்களோ பிரபல பதிவர்களோ சரக்கு இல்லாம இனி ஜெயிக்க முடியாதுங்க,, உசார் ஆகிக்கோங்க,,

  Get Your Online Business

 • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

  Brand Promotion

 • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

Comments

 1. இன்னும் நிறைய கட்டுப்படுத்த வேண்டிய வேண்டியுள்ளது...

  தகவலுக்கு நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்