Ads Top

அழகு தரும் பொருள் தேன்


அழகு தரும் பொருள் தேன் 

தேன் ஒரு அழகு தரும், நறுமணப் பொருளும் கூட, பாதாம் எண்ணையுடன் தேனைக் கலந்து முகத்திற்கு தடவி வந்தால் நிறமும் அதிகமாகி, அழகும் வளரும். முதலில் முகத்தை வெந்நீரில் சோப்பு கொண்டு நன்றாகக் கழுவ வேண்டும். பின்பு இந்தக் கலவைதைப் பூசி அப்படியே அரைமணி நேரம் இருக்க வேண்டும். பின்பு மென்மையான துணியால் அழுத்தி நன்றாக துடைக்க வேண்டும்.

                                


இன்னொரு முறை வெள்ளைக் கோதுமை மாவு ஒரு கரண்டி, அதனுடன் தேனைக் கலந்து, சில துளிகள் பன்னீரையும் விட்டு நன்றாகப் பிசைந்து, பின்பு அதை இன்னும் கொஞ்சம் பன்னீர் விட்டுக் கரைத்து முகத்தில் பூசிக் கொள்ளலாம். 

                                       

அரைமணி நேரம் அப்படியே இருந்த பின்பு குளிர்ந்த நீரால் ஒன்றாகக் கழுவி மென்னமயான துணியால் துடைக்க வேண்டும். வாரத்திற்கு இரு முறை ஒரு மாதம் வரை செய்யதால் போதும் ''விண்ணாடிக் கீழ்கடலில் விரிந்துவரும் பரிதியிலே கண்ணாடி ஏரியென கதிர் சாய்க்கும் வட்டமுகம்'' தானாக உங்களுக்கு வரும்.  

நன்றி!!!

இப்படிக்கு,
சிநேகிதி...

2 comments:

  1. பயனுள்ள தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. தேனின் ருசியை மட்டுமே அறிந்தவர்க்கு... பயன்களையும் விலக்கும் பயனுள்ள பகிர்வு...

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.