சங்கிலியில்லாத கலப்பு(hybrid) மின் சைக்கிள்


மாறிப் போன இன்றைய நவீன காலத்திலும் சைக்கிள் வண்டி ஒரு இலகுவான சுற்று சூழலைக் கெடுக்காத வாகனம். மனித சக்தியையைப் பயன்படுத்தும் இதனுடன் தொழில் நுட்பம் சேரும் போது இது மாதிரி கலப்பு மின் சைக்கிள் நமக்குக் கிடைக்கிறது

கால் சுதந்திரம் என்று பொருள் படும் இந்த   footloose மின் சைக்கிள் தென் கொரிய வாகன உதிரி தயாரிப்பு நிறுவனம்  மாண்டோவினால் தயாரிக்கப் படுகிறது. மிதிக்கும் உண்டாகும் சக்தி மின் சைக்கிளின் லிதியம் அயனி பாட்டரியில் சேமித்து வைக்கப் படுகிறது. இது மின்சாரத்தின் மூலம்       மைல்கள் வரை செல்லக் கூடியது. இதனுடைய வேகத்தைக் கண்காணித்து  மோட்டாரின் உற்பத்தி அளவை கட்டுப்படுத்தும் படி ஒரு மின்னணு கட்டுப்பாட்டு தொகுதி இதில் உண்டு

இதன் கைப்பிடிக் கட்டையில் வேண்டும் போது அகற்றிக் கொள்ளக் கூடிய காட்சி அமைப்பு மூலம் இதன் செயல் பாடுகளை கட்டுப் படுத்திக் கொள்ளலாம்.  2013  இல் சந்தைக்கு வரும் இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை

Comments

  1. நல்ல கண்டுபிடிப்பு.

    ReplyDelete
  2. வந்தவுடன் அறிவிக்கவும்,அவசியம் வாங்கனும்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்