கணினியும் நமது பெயர்களை வாசித்தால்?


                         
    நீங்கள் தட்டச்சு  செய்யும் பெயர்கள் அல்லது வசனங்களை உங்கள் கணினியானது வாசித்துக் காட்டினால் எப்படியிருக்குமென்று ஆசைப்படுகின்றீர்களா? இதற்காக மென்பொருட்களைத் இணையத்தில் தேடி அலைந்தும் பலனின்றி போனதா?ஆசை நிறைவேறவில்லையா? கவலையை விடுங்கள்.

உங்கள் ஆசையை நிறைவேற்ற இந்த சிறிய செயலைச் செய்துபாருங்கள்.
கீழ் உள்ளதை அப்படியே பிரதிசெய்து[Copy] அதனை Notepad ஒன்றினைத் திறந்து அதிலே  ஒட்டிவிடுங்கள்[Paste].

Dim u
serInput
userInput = InputBox("Hi..! Write a message to say…")
Set nkps = Wscript.CreateObject("SAPI.SpVoice")
nkps.speak userInput

பின்னர் இதனை “ .vbs “ என்ற File Name இல் சேமித்துக் கொள்ளுங்கள்.

உ+ம் : yourfilename.vbs 


       பிறகு,  எங்கே சேமித்தீர்களோ அங்கே சென்று அதனை திறந்துகொள்ளுங்கள். இப்போது கீழ் உள்ளவாறு ஒரு விண்டோ தோன்றும். இதில் உள்ள இடைவெளியில் உங்களுக்கு விருப்பமான பெயரையோ அல்லது வசனத்தையோ கொடுத்து OK பண்ணவும். இப்போது நீங்கள் கொடுத்த பதிவினை உங்கள் கணணியானது வாசித்துக்காட்டும்.
என்ன? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா?

Comments

  1. செய்து பார்ப்போம்... நன்றி...

    ReplyDelete
  2. தெரிந்து கொண்டேன் நன்றி....

    ReplyDelete
  3. முயற்சி செய்கிறேன் நன்றி...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்