Ads Top

துவங்குவோம் புதிய பயணத்தை…


இளங்காலை விடியலின், புதிய பயணத்தின், புது திட்ட நாழிகையில், தொழிற்களத்தின் பதிவுலக தோழர்களாகிய தங்களை சந்திப்பதில், பெரு மகிழ்ச்சிக்கொள்கிறோம். ஒவ்வொரு விடியலும் புது விதையுடனே பிறக்கிறது. விதை விருட்சமாக வேர் ஊன்றி திகழ்வது என்பது, நம் தன்னம்பிக்கையிலும், முயற்சியிலுமே இருக்கிறது.

இதோ இந்த மலர்கள், தங்கள் அனைவரின் தன்னம்பிக்கைக்காகவும், தங்களின் எழுத்தாற்றலுக்காகவும்.

 
விதங்களில் ஒரு மலராக அத்தனை பதிவுகளும் அருமை. கருத்தூன்றி கவனிக்கும் போது எங்கோ, ஒளிந்துக் கொண்டிருக்கும் சில பிழைகளும்,  கேள்வி குறி, காற்புள்ளி, முற்றுப்புள்ளி என்று தவறவிடும், கண்களுக்கு புலனாகி மனஓட்டத்தில் மாயமாகிவிடும், குட்டி பிழைகள் நம் லட்சிய பாதையில், சில கரும்புள்ளிகளை விட்டுவிட கூடாது என்பதற்காக, தங்களுடைய பதிவுகளை, டிராப்டில் போடும்படி கேட்டுக்கொள்கிறோம். தங்களுடைய பதிவுகள் படிக்கப்பட்ட பிறகு வெளியிடப்படும். தினம் ஒரு பதிவு இடவேண்டும் என்பது கட்டாயமில்லை. நாம் பதிவிடுகிற ஒவ்வொரு பதிவும், வாசகர் உள்ளங்களில் பட்டென்று, அட்டையாய் ஒட்டி வாசகர் உணர்வுகளில் கலந்து, படிக்க ஏவுதல் வேண்டும் என்பதும், தரமிகு வைரங்களை ஒத்ததாக தனித்தன்மையுடனும், கருத்தாழத்துடனும் வடிக்கவேண்டியது என்பது அவசியமாகும்.

நாம் மாறுபட்டவர்கள், வெற்றியின் புதிய வார்ப்புகள் எனவே வாசகர்களின், எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமான, கருத்துப்புடமிடப்பட்ட, பதிவுகளை எழுதி நம் தனித்தன்மையை நிரூபித்தலில் நமக்கும் மகிழ்ச்சி பெருகவே செய்கிறது என்பது உண்மை. எதிர்காலத்தில் தொழிற்கள பதிவர்கள், எழுத்தில் தமிழ்மொழியை போன்று தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று, பலர் பேசும் நிலை உருவாகும் என்பது திண்ணம்.

அதிகமான வலைபதிவுகளை படிப்பதும், கருத்துக்களை பரிமாறிக்கொள்வதிலுமே, நமது நட்பின் பயணமிருக்கிறது. அவ்வாறு செயற்படுத்தும் பொழுது, தனியரின் வலைபூவும் தனியரும் புகழடைவார்கள். நண்பர்களின் சேர்க்கையும், கருத்தொருமித்த நண்பர்களை கண்டடைதலும், எழுத்தின் பாற் நாம் அடையப்போகும் வெற்றியின் மையகாரணிகளாகும். எனவே தொழிற்கள பதிவர்களாகிய, நாம் அதிகம் படிப்போம், கருத்துரையிடுவோம். நண்பர்கள் வட்டத்தை பெருக்கி நாமும் பயனடைந்து, நம் கருத்துக்களினால் அவர்களும் பயனடைய செய்வோம். பிறகு ஒரு முக்கிய விடயம், பிரிவுகளை ஆங்கிலத்தில் இட வேண்டுகிறோம். அவ்வாறு செய்வதின் பலன் தேடு பொறியில் நமது பதிவு முன்னிலை வகிக்க ஏதுவாகும்.

நம் பதிவுகளுக்கு கருத்துரையிடும், வாசகர்களின் கருத்திற்கு பதில் தருவது, நம் வாசகர்களுக்கு நாம் தரும் அங்கீகாரத்தின் அடையாளமாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனின் வெற்றியும், அவன் படைப்பை படிக்கும் வாசகனின் எண்ணிக்கையினாலே நிர்ணயிக்கப்படுகிறது. கருத்துரைக்கு பதிலிடுங்கள். அநேக வலைபதிவர்களுக்கு அறிமுகமாகுங்கள்.  வலைப்பதிவர்களின் படைப்புகளை, படியுங்கள், பாராட்டுங்கள். ஒவ்வொருநாளும் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரியுங்கள்.

படித்ததில் பிடித்தவற்றை பதிவிடும் போது, படித்த தளத்தை குறித்தோ, படித்த தளத்திற்கு நன்றி சொல்வதையோ, தவிர்க்க முற்படுங்கள். படித்த கருத்துக்களை கொண்டு தங்களின் சொந்த உரைநடையில், ஆக்கங்களை பதிவிடுங்கள். கூடுமானவரை கொச்சை தமிழிலும், வழக்கு தமிழிலும், படைப்புகளை பதிவிடுவதை தவிர்க்க முனைவோம்.  உலகம் முழுவதும் பவனி வரும் தொழிற்களம் நம் தமிழ் அன்னையின் தனிச்சிறப்பியல்புகளை கொண்டதாக வெற்றி நடை பயில வேண்டும் என்பதில், நாம் அனைவரும் ஒருமித்த கருத்துடையவர்களாக இருப்போம்.

3 comments:

  1. சிறந்த ஒற்றுமை கருத்துக்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  2. தொடங்கியாச்சு நண்பரே....

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.