ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-7


கடந்த பதிவுகளில் நாம் ஆர்பா-நெட் பற்றிய வரலாற்று பின்னனியையும்,ஆர்பா-நெட் பற்றியும் ஓரளவு புரிந்து கொண்டோம்,இந்த பதிவில் ஆர்பா-நெட் தற்கால இணையமாக வளர்ந்த கதையை பார்ப்போம்..

ஆர்பாவின் உண்மையான நோக்கம் :


 ர்பாவின் நோக்கம் கால பங்கீடு (Time Sharing).இதை தெளிவாக பார்க்கலாம்.ஆரம்ப கால ஆர்பாவில் நான்கு நிறுவனங்கள் இணைந்தன என்று முன்பே பார்த்தோம் .அந்த நான்கு நிறுவனங்களின் கணினிகளும் மைய கணினிகளாக (Host Computers) செயல்பட்டன.ஆர்பாவின் கட்டுமான மாதிரி

  கால பங்கீடு எனப்படும் Time Sharing முறை மூலமாக ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினியை பார்வையிடுவது ,பல கணினிகள் மூலம் ஒரே கணினியை பார்வையிடுவது மற்றும் எங்கோ ஒரு மூலையில் உள்ள கணினியின் தகவல்களை பார்வையிடுவது,அல்லது அந்த கணினியை பயன்படுத்துவது போன்ற விசயங்கள் சாத்தியப்பட்டன.இது தான் ஆர்பா நெட் டின் உண்மையான நோக்கம்.

இதை எதற்காக செய்ய வேண்டும்:

ஆரம்பத்தில் ஆர்பாவில் இணைந்த நிறுவனங்கள் ராணுவத்திற்கு தேவையான ஆராய்ச்சிகளை செய்து கொடுக்கும் நிறுவனங்கள் என்று முந்தைய கேள்வி-பதில் பகுதியில் பார்த்தோம்.அந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் கணினிகளை இணைப்பதன் மூலம் அந்த நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை பகிர்ந்து கொள்ளவும்,ஆராய்ச்சிகளை பகிர்ந்து செய்யவும் முடியும். 

ர்பா நெட் பற்றிய புராணத்தை வரலாற்று பார்வையில் இருந்து விடைபெற்று கொண்டு  இனி அறிவியல் கண்ணோட்டத்தில் காணலாம்....


அறிவியலை எளிய முறையில் சொல்லும் போது தப்பர்த்தம் செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று எழுத்தாளர் சுஜாதா சொல்வதுண்டு.ஒரு விசயத்தை தவறாக புரிந்து கொள்வதை விட அதை புரிந்து கொள்ளாமலேயே இருப்பது மேல் என்பது என் கருத்து ஆகவே வாசக நன்பர்கள் சந்தேகங்கள் ,நான் கூறு விசயங்கள் தவறாக இருப்பின் இருப்பின் தாராளமாக கேளுங்கள்.தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இனி ஆர்பா செயல் பட்ட விதம்....

1969 -ல் ஆர்பாவில் இணைந்த இரு கணினிகள் தங்களுக்குள் "LOGIN" எனும் வார்த்தையை பரிமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு "LO" என்று இரண்டு எழுத்தை மட்டும் பரிமாறிக்கொண்டு படுத்து விட்டன என்று இத்தொடரின்  பாகம்-4 ல் பார்த்தோம்.

இரு எழுத்தை மட்டுமே பரிமாறிக்கொண்ட அந்த நிகழ்வை ஆர்பா தன் வெற்றியின் தொடக்கமாக கொண்டாடியது,ஆர்பாவின் விஞ்ஞானிகள் அதை ஒரு புரட்சியின் துவக்கம் என்று தீர்க்கதரிசனம் சொன்னார்கள்..

ஆரம்ப கால ஆர்பா:

எப்படி சாத்தியமானது இணைப்பு:

 1
         2
                3

கணினிகளை இணைக்க மூன்று முக்கிய விசயங்கள் தேவை..

1.கணினிகள் (இணைப்பை ஆதரிக்கும் கணினிகள்)
2.இணைப்பு கருவிகள் மற்றும் இணைப்பு கம்பிகள்
3.இணைப்பை நிர்வகிக்கும் வழிமுறைகள் (protocols)


1.ஆர்பாவில் இணைந்த கணினிகள் :

                                                                                   ஆரம்ப கால ஆர்பா


ரம்ப கால ஆர்பாவில் நான்கு நிறுவனங்கள் இணைந்திருந்தன...
அவற்றின் பெயர்களையும் அவைகளின் இயங்கு தளத்தின் (OS platform) பெயர்களும் கீழே

  • UCLA பல்கலை; கணினி , இது SDS Sigma 7 எனும் ரகம் Sigma Experimental operating system எனும் இயங்கு செயலியை (OS) கொண்டிருந்தது
  • Stanford Research Institute கணினி SDS-90 எனும் வகை கணினி, இது Genie operating system எனும் இயங்கு செயலியால் இயங்கியது.
  •  சான்டா பார்பராவில் இருந்த கலிபோர்னியா பல்கலை; IBM 360/75 எனும் கணினி அதன் இயங்கு தளம் OS/MVT operating system.
  • UTAH ல் DEC PDP-10 ரக கணினி Tenex operating system -த்தால் இயங்கியது.


ர்பா வெவ்வேறு OS உள்ள கணினிகளையும்,வெவ்வேறு ரக கணினிகளையும் இணைத்தது ,ஆர்பாவை கணினி சாரா (Machine Independent) மற்றும் இயங்குதளம் சாரா (OS independent) என்றும் சொல்லலாம்.தற்கால இணையமும் இதே அடிப்படையில் தான் செயல் படுகிறது.

2.இணைப்பு கருவிகள்:

ஆர்பா-நெட் கணினிகளை ஏற்கனவே அமெரிக்க நகரங்களின் தொலைபேசி இணைப்பிற்காக போடப்பட்ட கம்பிகள் மூலமாக IMP எனப்படும் கருவியின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட நான்கு கணினிகளை இணைத்தது,பிற்பாடு நிறைய கணினிகள் இணைக்கப்பட்டன.

3.இணைப்பு நெறிமுறைகள் (protocols):

கணினிகள் எப்படி தங்களுக்குள் 
தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கூறும் வழிமுறைகளே Protocols .

இதை நாம் ஒரு ஒப்பீடு மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்,சந்திப்பு சாலைகளில் நிற்கும் வண்டிகளை ஒழுங்குபடுத்தி அனுப்ப சிக்னல் தேவைபடுகிறது அல்லது போக்குவரத்து காவலர் தேவைப்படுகிறார்.


இல்லையென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது,

இதை போலவே கணினிகளில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்கள் எவ்வாறு செல்ல வேண்டும்,எந்த முறையில் இருக்க வேண்டும் என்றெல்லாம் நெறிமுறைகளை (protocols).வகுத்திருக்கிறார்கள்.

அடுத்த பதிவில் இன்னும் சுவரசியாமான  விசயங்களுடன் உங்களை சந்திக்கிறேன்..
 இத்தொடர் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் தொழிற்களத்தில் வெளிவரும்... தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள்.தங்கள் சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை மறக்காமல் கமென்டில் குறிப்பிடவும்Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்