விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMOஎன்ன தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளதா ? ஆனால் இது உண்மைதான். விபசாரம் என்பதில் ஆண் , பெண் தவிர இடைத்தரகர்களாக சிலர் வருவார்கள் அவர்கள் போல செயல்படுகின்றது இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் (பெயரிளியே தொடர்பு என இருப்பதாலோ என்னவோ ).இதில் எனக்கு தெரிந்து Airtel , Vodafone, Docomo மூன்றிலும் வரும் செய்திகளை கிழே குடுத்துள்ளேன் ...

சில தினகளுக்கு முன் வந்த ஒரு SMS in தமிழாக்கம் :

தமிழ் ஹாட் கேர்ள் சங்கீதா உங்களுக்காக காத்திருகின்றார். அவருடன் பேச உடனே தொடர்பு கொள்ளுங்கள் என கூறி ஒரு எண் குடுத்து உள்ளனர் . கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.


மற்றொரு SMS :

தனது இரவு நேர அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சுதா காத்திருக்கிறார். உடனே அழையுங்கள் . இதுக்கும் கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.


இது போல SMS மட்டுமல்லாது உங்கள் கணக்கில் உள்ள தொகையினை சோதிக்கும் போதும் வருகின்றது . இதில் என்ன கொடுமை என்றால் சண்டே அன்று 50% தள்ளுபடியாம்

நேற்று வந்தது :
Make new friends and Love chat with beautiful Girl 24  Hours call Now 006745599251 Neha..    ISD rates apply only 18 Yrs +.
(கடல்கடந்து கடலைபோட வழி செய்றாங்களாம் ) 

ரோட்டு ஓரத்தில் நின்று கொண்டு, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு ஆட்கள் பிடிக்கும் மாமாக்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

TRAI க்கு சில கேள்விகள் :

 • இது போன்ற SMS அனுப்புவது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?
 • வியாபார சம்பந்தமாக SMS அனுப்புவதை தடுக்க தினமும் 200 SMS மட்டுமே அனுப்பலாம் என தடை போட்ட நீங்கள் இதுக்கு ஏன் தடை போடவில்லை ?
 • போட்டிக்கு அனுப்பும் SMS முலம் மீடியாக்கள் கோடி கணக்கில் வருமானம் பார்கின்றது. மீடியாக்களும் தினமும் இவ்வளவு SMS தான் பெற முடியும் என கொண்டு வந்தால் என்ன ?
 • குழந்தைகள் கூட பதில் சொல்லும் கேள்விகளை கேட்டுவிட்டு Call Waiting இருந்தாகூட நிமிடத்திற்கு 10 ரூபாய் பிடுங்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவேண்டும் ?
 • Vodafone இல் ஓகே பட்டனை அழுத்தினாலே சில கட்டண வசதிகள் தானாகவே Activate ஆகின்றது . கேட்டால் உங்கள் மொபைல்ல FLASH MESSAGE என்ற வசதியை OFF பண்ணி வையுங்கள் என்கின்றனர் . இது தெரியாத கிராமத்து ஆட்கள் என்ன செய்வார்கள் ?
 • ரீ-சார்ஜ் செய்தால் குறைந்த பைசாவும் , சில SMS உம் தருகின்றன நிறுவனங்கள் . SMS அனுப்ப தெரியாத , அனுப்பாத நபர்களுக்கு இது வேஸ்ட் தானே ?

இது போல பல தேவை இல்லாத செயல்களில் பல தொலை தொடர்பு நிறுவங்கள் ஈடுபடுகின்றது இதை தடுக்க என்ன வழி ?

டிஸ்கி : இதுபோல நீங்கள் பட்ட அவஸ்தைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ..


 Comments

 1. நண்பரே எனக்கும் இது போன்ற sms எனக்கு வரும்போது நானும் இப்படி யோசிதது உண்டு..
  நல்ல பகிர்வு நன்றி

  ReplyDelete
 2. உண்மை உண்மை

  ReplyDelete
 3. அனைத்தும் உண்மை... நன்றி...

  ReplyDelete
 4. இந்த இணைப்பில் சென்று பாருங்கள், மற்றும் இந்த இணைப்பை சமூக வலைத்தளங்களில் பகிருங்களேன்
  இதோ இணைப்பு : http://ptab.it/bzRe

  ReplyDelete
 5. Fact , Fact , Fact, Fact.............
  Thanks for the sharing ...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்