தமிழ்நாடு - காவல்துறை-வரலாறுதமிழ்நாடு - காவல்துறை-வரலாறு

இந்திய காவல் பணி (Indian Police Service) என்பது 1948 - ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இவர்களே (IPS) இந்திய காவல் துறையில் உயர் பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள். அதன் பிறகு மத்திய காவல் பயிற்சிக் கல்லூரி மவுண்ட் அபு (Mount Abu) - வில் 1956 - ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பயிற்சிக் கல்லூரியின் தகுதி நிலை உயர்த்தப்பட்டு மத்திய காவல் அகாடமி என்று அழைக்கப்பட்டது. இந்த அகாடமியானது 1975 - ஆம் ஆண்டு ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டு அது சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் அகாடமி (Sardar vallabai patel National Police Academy) என்று அழைக்கப்பட்டது. இந்த அகாடமி IPS மற்றும் CBI அதிகாரிகளுக்கான பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

                                                           


மாநில காவல் துறைக்கு தலைமையாக காவல்துறை இயக்குனர் (Director General Of Police) இருக்கிறார்.இவருக்கு உதவியாக காவல்துறை இணை இயக்குனரும் (ADGP) கமிஷனரும் (Inspector General) இணை கமிஷனரும் (Joint Commissioner) துணை கமிஷனரும் (Deputy Inspector General) இருக்கிறார்கள்.

இந்த மாநில நிர்வாகமானது நிர்வாக வசதிக்காக பல சரகங்களாகவும் பல காவல் மாவட்டங்களாகவும் மேலும் பல வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மாநில காவல்துறையின் அமைப்பானது பல பிரிவுகளாக அமைக்கப் பட்டுள்ளது. அதாவது படிநிலையின்படி (Heirarchy) அமைந்துள்ளது.

நோக்கம்

மாநிலத்தில் சட்டம் ஒழுக்கை பராமரித்து பொது மக்களுக்கு அமைதியான பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதே இந்த மாநில காவல்துறையின் முக்கியமான பணியாகும்.

சட்டம் - ஒழுங்கு பராமிப்பு, குற்றத்தடுப்பு போன்றவற்றிற்கு மாநில அளவில் பொறுப்புடையவர் காவல்துறை இயக்குனரே (DGP) ஆவார். காவல்துறையின் நிர்வாகமானது மாநகரம், சரகம் மற்றும் மாவட்டம் என்ற அளவில் பிரித்து செயல்படுகிறது.

                                                   

மாநகரத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்தைக் கவனிக்க தனித்தனியே துணை கமிஷனர்கள (DCP) இருக்கிறார்கள். அவர்களின் படி நிலைகள்...


காவல்துறை இயக்குனர் (DGP)

காவல்துறை இணை இயக்குனர்  (ADGP)

கமிஷனர் (IG)

 (RURAL)                                                                          (CITY)

இணை கமிஷனர் (DGP)                                           இணை கமிஷனர் (JGP)

மாவட்ட கண்காணிப்பாளர் (SP)                          துணை கமிஷனர் (DCP)

துணை கண்காணிப்பாளர் (DSP)                          உதவி கமிஷனர் (ACP)

ஆய்வாளர் (Inspector)                                                 ஆய்வாளர் (Inspector)

உதவி ஆய்வாளர் (Sub - Inspector)                          உதவி ஆய்வாளர் (Sub - Inspector)

தலைமை காவலர் (Head Constable)                        தலைமை காவலர் (Head Constable)

காவலர் (Constable)                                                       காவலர் (Constable)     

நன்றி...

என்றும் உங்கள் வானில் வளர்பிறையாய்...
அழகுநிலா...                          


Comments

  1. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  2. காவல் துறையில் உள்ள துறைகள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது .. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்