காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...காலை தேநீர்...

அழிந்து வரும் நம் தமிழ் அன்னையை காக்க வேண்டி, ஒன்று திரண்டுள்ள நமது இனிய தமிழ் பதிவர்களை, தொழிற்களம் காலை தேநீர், இரு கரம் கூப்பி தேநீரை சுவைக்க அழைக்கிறது. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....  • நீ மற்றவர்களிடம்  நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசு   அதற்காக கொட்டித் தீர்த்து விடாதே.
  • இதயத்தை   ஆயுதத்தால்   வெல்ல  முடியாது, மென்மையான    அன்பால்    தான்   வெல்ல   முடியும்.    
  • நல்ல விஷயங்களை  அமைதியாகச்  செய், வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்.
  • நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும்  இருந்தால்  யானையை நூலால்   கட்டிக் கொண்டு போவது  போல  எங்கும்  போய் வரலாம்.
  • உன்னை   நீ   அறிய   வேண்டுமானால் மற்றவர்களை  கவனி;  மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.

நன்றி,

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

Comments

  1. •நல்ல விஷயங்களை அமைதியாகச் செய், வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்

    காலை தேநீர் உள்ளத்திற்கு ஊட்டசத்துக்களை அள்ளி தரும் உற்சாக பெருவெள்ளம்...தொடரட்டும் இப்பணி பரவட்டம் தமிழ் மொழி

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்