உப்புத் தண்ணீரை தூய குடி நீராக்கும் சூரிய அடுப்பு!
இத்தாலிய வடிவமைப்பாளர் ஆன காப்ரியல் டைய மோனிட் மாணவராக இருக்கும் போது மேற்கொண்ட பயணங்களில் பார்த்த உலக குடி தண்ணீர் பற்றாக் குறை வெகுவாகப் பாதிப்பை ஏற்படுத்தியது. வடிவமைப்பாளர் என்ற முறையில் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதன்படி உருவானதுதான் படத்தில் பார்க்கும் சூரிய அடுப்பு. உப்புத் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் கடற்கரை பகுதிகளில் இது வெகுவாகப் பயன் படும்
எலியோடா மெச்டிகோ என்ற இந்த அடுப்பு ஒரு தலை கீழான காபி வடிகட்டி போல செயல் படுகிறது. இந்த செராமிக் அடுப்பு மூன்று பாகங்களால் ஆனது. இதன் கருப்பான மேல் பாகத்தில் தான் உப்புத் தண்ணீர் ஊற்றப் படுகிறது. சூரிய ஒளியால் தண்ணீர் சூடாக்கப் படும் போது நீராவி உண்டாகிறது. அப்போது ஏற்படும் அழுத்தம் நீராவியை மத்திய பாகத்தில் உள்ள ஒரு குழாய் வழியாக கீழே தள்ளுகிறது. இது அடிபாகத்தில் தண்ணீராக மாறி தேங்குகிறது. வட்டப் பாத்திரம் போல இருக்கிற அடிப்பாகத்தை வெளியில் இழுத்து அதில் இருக்கும் நல்ல தண்ணீரை குடிக்கப் பயன் படுத்தலாம். இந்த அடுப்பில் ஒரு நாளைக்கு 5 லிட்டர்கள் நல்ல தண்ணீர் பெறலாம்.
டைய மோனிட் பானை போன்ற பொருட்களில் இருந்து இதை தயாரித்த போதிலும் தங்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இதை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் வெளியே இழுக்கும் வட்டப் பாத்திரம் போன்ற அடிப் பாகம் தலையில் சுமந்து போகும்படி இலகுவாக இருக்கிறது. கிராமங்களில் தலையில் சுமந்து செல்வது நடை முறையில் இருக்கிற ஒன்று.
பல பேர் வாழும் சமூகக் குடியிருப்புகளில் இதைப் பயன் படுத்தலாம் மருத்தவ மனைகளிலும் இது பயன் படும். தனிக் குடும்பங்களும் இதை பயன் படுத்தலாம். மொத்தத்தில் கடல் நீர் காணப் படும் இடங்களில் தண்ணீர் தட்டுப் பாட்டைப் போக்க கிடைத்த ஒரு வரப் பிரசாதம் இந்த சூரிய அடுப்பு
நல்ல தகவல்...
ReplyDeleteநன்றி...
அருமையான பயனுள்ளப் பதிவு. உண்மையில் அடுப்பு மட்டுமின்றி, நம்முடைய மின்சாரத்தேவைக்கும் சூரிய சக்தியே நிரந்தரத் தீர்வு
ReplyDeleteமின்சாரத்தால் இயங்கிக் கொண்டிருக்கும் இம்மனித உலகிற்கு சூரிய சக்திதான் நல்ல தீர்வு.
ReplyDeleteநல்ல முயற்சி ....நன்றி
ReplyDeleteparattukalukku nanri. naan matru sakthi upoyogap paduththa vendum enpathil munaippaga iruppavan. ellorum ithai varaverpathu kurithu mikka magilchi.
ReplyDelete