அறிவோமா அறிவியல்!!!
அறிவோமா அறிவியல்!!!
பென்சில்களில் HB, 2B என்று எதனால் குறிப்பிடுகிறார்கள் தெரியுமா?
பென்சில்களில் எழுதும் பகுதி கிராபைட்டு என்ற கரியால் ஆனது. கிராபைட்டுடன், மிக நுட்பமான களிமண் கலந்து உருட்டி இது செய்யப்படுகிறது. இவ்விரண்டின் விகிதத்திற்கேற்ப பென்சில் கருப்பாகவோ, லேசாகவோ இருக்கும்.
HB என்றால் ஹார்டு பிளாக் என்றும் B என்றால் பிளாக் என்றும் பெயர். Bயின் எண் கூடக்கூட பென்சில் மிருதுவாகவும், கருமையாகவும் எழுதும். H கூடக்கூட அது லேசாகவும், மெல்லியதாகவும் எழுதும். இஞ்சினியர்கள் கூர்மையாக, மெல்லிய கோடுகள் போட H பென்சில்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஆர்டிஸ்டுகள் கருமையாக, வேகமாக, அழுத்தமான கோடுகள் போட்டு வரைய 2B, 3B, ....6B போன்ற பென்சில்களை உபயோகிக்கிறார்கள். சாதாரணமாக எழுதுவதற்கு HB பென்சில்களே போதுமானது...
நன்றி,
என்றும் உங்கள் மனதில் வளர்பிறையாய்...
அழகுநிலா...
தகவலுக்கு நன்றி...
ReplyDeleteபென்சிலில் இவ்ளோ விஷயம் இருக்கா? அன்றாடும் நாம் பயன்படுத்தும் பென்சிலை பற்றி தெரிவித்தமைக்கு மிக்க நன்றி தோழரே/
ReplyDeleteஜெய் சங்கர்