மனதோடு விளையாடு

 • உங்களுக்கு பதவி உயர்வு வேண்டுமா..? 
 • உங்கள் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்களை உங்களுடனே வைத்திருக்க வேண்டுமா?
 • உங்களுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமா? 
 • கடன் பிரச்சனை இல்லாமல் வாழ்க்கையை அமைத்துகொள்ள வேண்டுமா...?
இப்படி அடுக்கி கொண்டே எத்தனை கேள்விகள் கேட்டாலும் ஆம், ஆம் என்று  பதில்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.. ஆம், மனிதனை கட்டுப்படுத்தும் மந்திர சொல் இருக்கிறது.

       நல்ல காலம் பொறக்குது! நல்ல  காலம் பொறக்குதுனு!! உங்கள் வீட்டு வாசலில் ஒரு கனீர் குரல் கேட்டதுண்டா? அந்த குடுகுடுப்பை காரரின் ஜக்கம்மா சொல்வது உண்மைதானுங்க..  நம்புங்க. நிஜமாலுமே இந்த உலகத்தில் ஜக்கம்மா சொல்வது நடக்கும். 

           உங்கள் இடுப்பை ஒரு முறை தடவிப்பாடுங்கள். அதில் ஏதும் மந்திர தகடு கட்டப்பட்டிருக்கிறதா? " நம்புங்கள்! இதுவரை உங்களை காப்பாற்றி கொண்டு உங்கள் வெற்றியுடன் சம்பந்தந்தமாக உள்ளது அந்த மந்திர தகடே."

     உங்களுக்கு தீராத வயிற்று வலி அல்லது தலைவலி இருக்கின்றதா? பயப்படாதீர்கள் ஒரு மணி நேரம் உங்களை புரிந்துகொண்டவர் ஒருவரை உங்களுக்காக ஜபம் செய்ய சொல்லுங்கள். " நாம்புங்கள்! உங்கள் வலி நிச்சயம் இனி வராது".


அல்லது, ஒரு சிறு  திருத்தம் நம்ப வையுங்கள்!!

    வெற்றியாளர்களாய் இன்று வலம் வரும் அனைத்து தொழிலதிபர்களுமே "நம்பினார்கள்" இந்த சூச்சுமத்தை.    உங்களுக்குள் ஒருவன் இருக்கின்றான். அவனை கண்டுபிடித்து அவன் சொல்வதை நீங்கள் கேட்கத் துவங்கினால் மேற்கண்ட கேள்விகள் அனைத்தையும் உங்களால் சாதிக்க முடியும்.

அட, மனதோடு விளையாடலாம் வாங்க..

உங்கள் வெற்றிக்கான தேதியை இன்றே குறித்து வைத்து கொள்ளுங்கள். நீங்கள் குறித்து வைத்த தேதியில் உங்களை வெற்றியாளனாய் மாற்ற வேண்டியது நம்ம பொறுப்பு சார்...

கமலின் எனக்குள் ஒருவன் பார்த்திருக்கிங்களா?? அது கொஞ்சம் பழைய படம்.

அதில் இறந்து போன ஒரு கமல் தன் நினைவுகளை மற்றொரு கமல் மூலமா வெளிவருவது போல திரைக்கதை நகரும்.
அது போல தாங்க, "உங்களில் இருக்கும் இன்னொருவனை வெளிக்கொணருங்கள்."

  ஒருமுறை, பாரிஸ்சை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளுக்கு நீண்ட நாட்களாக இருந்த பார்வை குறைபாட்டை போக்க பல மருத்துவர்களிடம் காண்பித்து பலனில்லாமல்,  தன் மகளின் பார்வை குறைபாடு சரியாகிவிடும் எனில் என் கட்டை விரலை வெட்டிக்கொள்கிறேன் என மனமுருகி வேண்டிக்கொண்டார். திரும்பத்திரும்ப இதை தன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சொல்லி வந்தார்.

ஒருநாள் அவர் தன் தொழிற்சாலையில் இயந்திரத்தை பழுதுபார்த்துக்கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் அவரின் கட்டை விரல் துண்டிக்கப்  பட்டு தனியே விழுந்தது. மிகுந்த ரத்தப் போக்குடன் மருத்துவம்னைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நலமாகி வீடு திரும்பியதும் அவருக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

ஆம், வெகு நாட்களாக பார்வை குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் மகள் பரிபூரணமாக குணமாகியிருந்தாள்.

மனதோடு விளையாடு 

ஆழ் மனதுடன் இணைந்து வெற்றியை கொண்டாட வாருங்கள்

Comments

 1. வாங்க களமே வருக நம்மவீட்டுக்கு வந்துஇருக்கிங்க வாங்க பழகலாம்.ஆமா மந்திரதகடு அங்கியா இருக்கு..?

  ReplyDelete
 2. குசும்பு புடுச்ச ஆளய்யா,,,
  இரும் வருகிறோம்,,

  ReplyDelete
 3. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்