பயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்


அரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும்.

30% முதல் 50 % வரை மானியமாகவும் 1.5 இலட்சம் முதல் 7.5 இலட்சம் வரை கடன் உதவியும் ஆதிதிராவிடர் மற்றூம் பழங்குடியினர் வளர்ச்சிக்காக தொழிற்கடன் வழங்கி வருகிறது.

போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெரும்பாலோனோர் இதனை பயன்படுத்த தவறி வருகின்றனர்.

ஆதிதிராவிட தொழில்முனைவோரின் நலன் கருதி, ஆதிதிராவிடர் நலத்துறை (தாட்கோ) நிலம் வாங்குதல் மற்றும் மேம்பாட்டு திட்டம், தொழில்முனைவோர்திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை அமைத்தல், மகளீர் சுய உதவி குழுக்களுக்கான சுழல்நிதி, பொருளாதார கடன் உதவி திட்டம், மின் இணைப்பு விரைந்து பெறுதல், விருப்புரிமை நிதி, சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு எழுத புத்தங்கள் வாங்குவதற்கான நிதி பெட்ரோல் டீசல் கேஸ் விற்பனை நிலையம் அமைத்தல் ஆகிய திட்டங்களின் கீழ் கடனுதவி பெற ஆதிதிராவிடர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விண்ணப்பப்படிவம் பெற,  மேலும் விபரங்கள் அறிய, கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://application.tahdco.com/img/Action_Plan_Comprehensive_guidelines_for_implementing_TAHDCO_schemes_under_SCA_2012.pdf

பதிவர்கள் தங்கள் பதிவுகளிலும், வாசகர்கள் தங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர் மத்தியிலும், இணைய உலக நண்பர்கள் முகநூல் போன்ற பொது ஊடகங்களில் இச்செய்தியை பகிர்ந்து, தேவை உள்ளோர் அறிந்து பயன்பெற நம்மால் ஆன முயற்சியுடன் இதை சேவையாகவும் செய்வோம் என கேட்டுக்கொள்கிறோம்.

Comments

  1. நல்ல தகவல் சகோ எனக்கு தெரிந்தவர்களிடம் இந்த தகவலை தெரிவிக்கிறேன் நன்றி..

    ReplyDelete
  2. நன்றி... நண்பர்களிடம் பகிர்கிறேன்...

    ReplyDelete
  3. yes.send details to selvafuels@gmail.com

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்