காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

காலை தேநீர்...

''வாடை இளந்தென்றல் மெல்ல தவழ்ந்து வர...
சின்னச் சின்ன மழைத்துளிகள் மெல்ல இறங்கி வர...
முதல் துளி பட்டு, மண் வாசனை வீச...
இந்த காட்சியை காண சூரியன் மெல்ல தன் செங்கதிர் நீட்டி, நமது தொழிற்களம் காலை தேநீரை பருக வருகிறது...
நமது இனிய தமிழ் பதிவர்களே, நீங்களும் வாருங்கள் தேநீரை பருகுவோம்...''

இன்றைய தேநீர் துளிகள்...


  • ஒவ்வொரு நாள் காலையும்,ஒரு முழு நாளை நல்ல நாள் ஆக்குவதற்கான சந்தர்ப்பத்தைத் தருகிறது...
  • எல்லா நேரமும் நல்ல நேரம் தான், அதில் எதை செய்து முடிக்கிறாய் என்பது தான் கேள்வி...
  • உன் முகம் ஆண்டவனால் உனக்கு தரப்பட்டிருக்கிறது, சிரிப்பை நீயாகத்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்...
  • மனிதர்கள் பேராசையால் பெரிய இன்பத்தை எதிர் பார்த்து, அன்றாட மகிழ்வுகளை தொலைத்து விடுகின்றனர்...
  • தன்னால் செய்து முடிக்கக் கூடிய வேலையை, மற்றவர்களிடமிருந்து எதிர் பார்க்கக் கூடாது...

நன்றி,

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்