நலக்கல்வி திட்டத்தில் ஆசிரியர்...


நலக்கல்வி திட்டத்தில் ஆசிரியர்...

ஒரு ஆசிரியர் தான் பல மாணவனின் வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறார். அப்படிப்பட்ட ஆசிரியர்கள், தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட்டால்  நல்லதொரு சமுதாயத்தை நிச்சயம் உருவாக்க முடியும் என்பது சாத்தியமே...

                                

ஆசிரியரின் பொறுப்புகள்
 • பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசகராக இருந்து உதவி புரிதல்.
 • பள்ளி குழந்தைகளின் செயல்முறைகளும், சூழ்நிலைகளும் அவர்களின் நலத்தை பாதுகாக்க ஏதுவானதா?  அல்லது, ஆபத்தை விளைவிக்க கூடியனவையா? என்று ஆராய்ந்து பின் அதை சரி செய்யவும், மாற்றியமைக்கவும் முயலுதல்.
 • பள்ளி குழந்தைகளின் சுகாதாரம், பழக்க வழக்கம், அன்றாட தேக ஆரோக்கிய நிலை ஆகியவற்றை நன்கு கண்காணித்து, அவர்களுக்கு நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை வளர்த்து, உற்சாகப்படுத்தல்.
 • பள்ளியின் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க பள்ளி குழந்தைகளை ஊக்கப்படுத்தி உதவி புரிதல்.
 • பள்ளியில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பார்வையிட்டு, அவை எவ்வாறு சுகாதார முறைப்படி தயாரிக்கப்படுகின்றன, பாதுகாக்கப் படுகின்றன. பின் அவை எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்பதை மேற்பார்வையிட்டு நல்ல உணவு பழக்க வழக்கங்களை பயிற்றுவித்தல்.
 • பள்ளிக்கு வேண்டிய அடிப்படை சுகாதார தேவைகள், குழந்தைகளின் ஆர்வங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மையாக கொண்டு சுகாதார கல்வி பயிற்சிகளை திட்டமிடுதல்.
 • மாணவர்கள் பள்ளி மற்றும் சமுகத்தில் சுகாதாரக் குழுக்களை அமைக்கவும், சுகாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் தயார் செய்தல்.
 • பள்ளியிலும்,வீட்டிலும் பொதுவாக சுகாதார பழக்க வழக்கங்களை எவ்வாறு குழந்தைகளுக்கு பயிற்றுவித்து மேம்படுத்தலாம் என்பது பற்றி பெற்றோர்களுடன் இணைந்து திட்டமிடுதல்.
நன்றி...

என்றும் உங்கள் வானில் வளர்பிறையாய்...
அழகுநிலா...
Comments

 1. அனைத்து ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்