துப்பாக்கி

நேரம் இரவு 10 மணியை தாண்டி இருந்தது. ஜெர்ரியின் வீட்டில் எல்லோரும் அவரவர் வேலையை பார்த்து கொண்டு இருந்தனர். ஜெர்ரிக்கு அப்போது 15 வயது இருக்கும்.

நேற்று திருவிழாவில் வாங்கிய விளையாட்டு துப்பாக்கி உடைந்த சோகத்தோடு ஒரு ஓரத்திலே கண் கலங்கி உட்காந்து இருந்தான்.

செய்தி பார்த்து விட்டு தொலைகாட்சி பெட்டியை அணைத்து விட்டு தாத்தா ஜெர்ரியை பார்த்து அருகிலே போனார். அப்போது ஜெர்ரியின் அம்மா "மாமா அவன் சொன்னா கேட்க மாட்டான் அவன் பிடிவாதத்துக்கு அளவில்லாம போய்கிட்டு இருக்கு. அங்க வந்தா ரெண்டு அடி போட்டு தான் போவன். ஜெர்ரி எழும்பு போய் படு " என்று வேலை செய்து கொண்டு சாக்குக்கு கத்தினாள் ஜெர்ரியின் அம்மா சியாமா.

"இல்ல சியாமா. எல்லாம் அப்பா கொடுக்குற செல்லம் தான். சின்ன பையன் கிட்ட பெரிய விசயங்கள சொல்லி அவன கெடுத்து வைச்சு இருக்காரு" இரவு சாப்பாடை ஆரம்பிக்க முதல் இதை சொல்லி முடித்தான் ஜெர்ரியின் அப்பா ஜோசப்.

கண் குளமாகி அணை உடையும் நேரத்தில் ஜெர்ரியை கட்டி தூக்கி அவனது கையில் இருந்த துப்பாக்கியை சரி செய்ய தொடங்கினார் தாத்தா.

ஜெர்ரி அலுத்து கொண்டே " தாத்தா நிஜ துப்பாக்கி வாங்கி இருந்தா உடைஞ்சு இருக்காது இல்ல தாத்தா??"

"ஹா ஹா இல்லப்பா.."

 சிறிது நேரம் விட்டு தொடர்ந்தவராய்
"நிஜ துப்பாக்கி எல்லாம் சாதரணமா கிடைக்காது பா. அதுக்கு அதிக வரைமுறைகள் இருக்கு"

சாப்பிட்டு கொண்டு இருந்த ஜோசப் கவனத்தை திருப்பி "அதுவும் இலங்கைல என்றா சான்சே இல்ல. ஆனால் இந்தியாவில சில முறைகள் இருக்கு இல்லபா?"

ஆமா ஜோசப் "தனிப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு அடிப்படையில் துப்பாக்கி லைசென்ஸ் பெறனும்னா  சென்னையில் உள்ளவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மாவட்டங்களில் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது  தங்களது வருமான வரிச் சான்றிதழ்,  இருப்பிடச் சான்றிதழ் அதாவது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு அவையும் தொழில்ரீதியான விவரங்கள் அதாவது பாங்க் பேலன்ஸ் ஷீட், ஆடிட் ரிப்போர்ட், சொத்து விவரங்கள், அவர்களுக்கு எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த போலீஸ் எஃப்.ஐ.ஆர். நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும். அந்த ஆவணங்களை சரிபார்த்த 
பின்னர் கமிஷனர்/கலெக்டர் அலுவலகத்தின் வாயிலாக விசாரணை நடைபெறும். அவர்களிடம், என்ன காரணத்திற்காக துப்பாக்கி வாங்க விரும்புகிறார்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்கிற ரீதியில் விவரங்கள் கேட்கப்படும். துப்பாக்கி வாங்க விரும்புபவர் வசிக்கும் பகுதியின் உள்ளூர் காவல் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரி நேரில் வந்து விசாரிப்பார். இதன் அடிப்படையில்தான் துப்பாக்கி வாங்குவதற்கான லைசென்ஸ் வழங்கப்படும். அந்த லைசென்ஸை வைத்து துப்பாக்கி விற்கும் நிறுவனங்களில் துப்பாக்கி வாங்கலாம். துப்பாக்கி வாங்க விரும்புபவர்கள் மீது ஏற்கெனவே கிரிமினல், சிவில் புகார்கள் இருந்தால் அவர்களது லைசென்ஸ் மனு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இதுதவிர போலீஸுக்கு வேறு எந்த வகையில் சந்தேகம்  இருந்தாலும் அதன் பெயரிலும் லைசென்ஸ் கொடுப்பதை நிறுத்த அவர்களுக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன."
இது துப்பாக்கி வகைகளில் ரிவால்வர் வகை துப்பாக்கி ஆகும்

தாத்தாவை வைத்த கண் வாங்காமல் ஜோசப்பும் ஜெர்ரியும் பார்த்து கொண்டு இருக்க தொடர்ந்த தாத்தா "ஏர் கன் வகை (Air Gun) துப்பாக்கிகள் வாங்குவதற்கு லைசென்ஸ் எதுவும் தேவையில்லைபா"

தாத்தா பேசி முடிக்கவும், ஜோசப் சாப்பிட்டு முடிக்கவும், ஜெர்ரி தாத்தாவின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்து ஓடவும் அந்த நிமிடம் வந்து தொடர்ந்து அடுத்த நிமிடத்துக்கு அழைப்பு விடுத்து முடிந்தது. 

COOL 

நன்றி அடுத்த பதிவில் சந்திக்கலாம் 


ஹாரி R 

ஹாரியின் தொழிற்கள பதிவுகள் வாசிக்க..


Comments