தமிழ் என் அடையாளம்

"வாழும் தமிழ்"


பாய்ந்து வரும் தோட்டாவின் இமைகள் விழிக்கும் முன்பு, கனல் போன்ற ஒரு வார்த்தை இன்றும் உலகில் பல இலட்சம் மக்களால் சாத்தியமாகி இருக்கின்றது

" கோழையே! நீ சுடுவது சே குவராவை அல்ல. ஒரு தனி மனிதனை தான்."

அந்த மகத்தான மனிதனின் உறுதியை கண்டு இருதயத்தை துளைத்த ஆறு தோட்டாக்களும் சில விநாடிகள் நடுக்கம் கொண்டே விசையிலிருந்து வெளியேறின.

ஆம், இன்று வரை அழிவில்லாமல் தன் இன விடுதலையை நிஜமாக்கியது அந்த ஒரு வார்த்தை.

உலக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் நிரப்ப பட்டிருக்கும்  உறையவைக்கும் நிகழ்வுகள் யாவும் தன் அடையாளத்தை நிலைநிறுத்தவே பாடு பட்டிருக்கின்றன.


    இந்த அத்தியாயத்தை துவங்கும் முன் சில விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

     ஒவ்வொரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் இன்றைய நாளில் 82 வயது தான். அதுவும் இந்தியர்களை பொறுத்தவரை 67 வயது மட்டுமே என்று  2012 ஆம் ஆண்டிற்கான சராசரி ஆயுட்கல  பட்டியலை உலக வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

உலக மக்கள் தொகையை பொறுத்தவகையில் மிக வேகமாக 7 பில்லியன்களை கடந்து சென்று விட்டோம். இந்த ஏழு பில்லியன் மக்கள் தொகையில் நீங்களும் நானும் சிறு புள்ளிகள் மட்டுமே. மனிதன் மதங்களாலும், இனங்களாலும், மொழிகளாலும் வேறுபட்டுக் கொண்டு வாழ்வது எல்லாம் அதிகபட்சம் என்பத்தி இரண்டு ஆண்டுகள்  மட்டுமே! 

இந்த குறைந்த ஆயுட்காலத்தில் ஒவ்வொரு மனிதனுக்குமான அதிகபட்ச  சந்தோசத்தை தருவது ஒரு அன்பான மனைவியும், அழகான குழந்தையும், ஆலோசனைகளுடன் உறவாடும் சொந்தங்களும், நண்பர்களும் மட்டுமே ஆகும்.

          இந்த நிமிடம் சற்றே உங்கள் குடும்பத்தை திரும்பி பாருங்களேன்...

   நாற்காலியில் செய்தித்தாளை உற்று பார்த்து மூக்கு கண்ணாடியை  சரிசெய்து கொன்டிருக்கும் அப்பா

அருகிலேயே தரையில் கலர் குச்சிகளை கிறுக்கி விளையாடும் குழந்தைகள்

பூஜை அறையில் அம்மாவும்

சூடான தேநீருடன் மனைவியும் என்று ஓரு அழகான குடும்பத்தை தானே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான்?

பின் எதற்காக இத்தனை போராட்டங்களும்?

எந்த பிரச்சனைகளையும் இல்லாமல் எந்த நொடியை ஆவது நீங்கள் கடந்து போனதுண்டா?

      வாழும் காலம் முடியும் வரை, ஒரு நிமிடம் ஆவது நிறைவாக வாழ்ந்து விட வேண்டும் என்றே தானே ஒவ்வொரு நொடியை போராடி கழித்து தோத்து போகின்றோம்..?

எனது சந்தோசம், எனது துக்கம் இதில் தமிழுக்கு என்ன பங்கு இருக்கிறது என்று தானே அடுத்த சந்தேகத்தை தயாராக வைத்திருக்கின்றீர்கள்?

ஆம், உங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் உங்கள் மொழி தான் தீர்மானிக்கிறது. 

      ஒவ்வொரு இருட்டையும் ஒரு சிறு கம்பியால் தான் மிக பிரகாசமாக  வெளிச்சப்படுத்த முடிகிறது என்பது உண்மை அல்லவா? அதுபோலவே உங்கள் பிரச்சனைகளும் கூட உங்கள் மொழியால் சரிசெய்ய முடியும் என்பதை விளக்கிடவே இந்த பகுதியானது

மொழியால் என்ன செய்துவிட முடியும்?

மொழி அனைத்தையும் செய்யும். உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றிட மொழி துணை புரியும். 

சரித்திரங்கள் சொல்வதை கொஞ்சம் புரட்டி பாருங்கள் உங்கள் மொழி என்பது உணர்வல்ல உயிர் என்பதை தெளிவாக உணர்வீர்கள்.

இந்த பதிவின் அடுத்த  அத்தியாயங்களை சொடுக்கும் முன்பு,

நான் தமிழன். எனது முன்னோர்கள் தமிழர்கள், என் பிள்ளையின் உடம்பிலும் தமிழ் இரத்தம் பாய்ந்துள்ளது என்று ஒரு முறை நெஞ்சை நிமிர்த்தி உரக்க சொல்லுங்கள்

" தமிழ் என் அடையாளம் " என்று

சரித்திரமும், அறிவியலும் தன் மொழி பற்றி என்ன சொல்கின்றன..?

அடுத்தடுத்த அத்தியாயங்களில்.

போராடி வீழ்வது போராடி வெல்வதற்கே!!  ஓரு உலக மகா சரித்திரத்தில் மொழியின் பங்கு

  Sponser Link

 • Do you need your own website. For contacts click on the linkMakkasanthai.com

Comments

 1. அருமையான துவக்கம்...எதிர்பார்ப்புகளுடன்...

  ReplyDelete
 2. சிறப்பான ஆரம்பம்...

  தொடர்கிறேன்...

  நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்