போராடுவது என் உரிமைக்காக - தமிழ் என் அடையாளம்

      விடுதலை வேட்கைக்காக குரல் கொடுத்து வெற்றி பெற்ற அனைத்து சரித்திரங்களும் இந்த உண்மையைத் தான்  சொல்கின்றன

உனது உழைப்பின் வெற்றி என்பது உன் குடும்பத்தையும்
உன் உரிமையின் வெற்றி என்பது உன் பின்னால் உள்ள
சமூகத்தயும் சார்ந்து இருக்கிறது என்பதே ஆகும்.

    தனிமனிதனால் ஒரு மகத்தான மாற்றத்தை  ஏற்படுத்த முடியுமேயானால், அவன் பின்னால் வலிமை மிக்க மக்கள் படை பலமாக இருக்கிறது என்பதே உண்மையாக இருக்க முடியும்.

எனது உரிமைகளை கேட்டு பெற முடியவில்லை எனில் எனது  வாழ்வும் எனது வெற்றியும் எதைக்கொண்டு அமையக்கூடும்? என்று ஓங்கியுரைத்து  "தமிழ் என் அடையாளம்" உருப்பெருகிறது.

      ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றத்தையும் இந்த சமூகம் கண்டு வந்திருக்கிறது. இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒரு மாறுபட்ட மாற்றத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க தமிழ் என் அடையாளம் தனது இறுதி அத்தியாயங்களில் எடுத்துரைக்கும்.

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும்"' கொண்ட ஒரு மாபெரும் மாற்றத்தை காண எம் முன்னோர் கண்ட கனவினை நினைவாக்கிடும் பொற்காலத்தை எம் தலைமுறைகள் வெகு விரைவில் உருவாக்கிடுவர்.

      "எனக்கு முதல் அடையாளம் தருவது என் மொழி" என்றால், எதற்காக எனக்கு அடையாளம்  தேவைப்படுகிறது? என் உரிமை என்றால் என்ன?/ அந்த உரிமைகளால் நான் அடைந்தது என்ன? எனக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கும் என் அடையாளத்தை மறப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?  நான் என்னவாக ஆக வேண்டும் என்பதை என் அடையாளம் எப்படி தீர்மானிக்க முடியும்? எதற்காக நான் சமூகத்துடன் கட்டுப்பட்டு வாழ வேண்டும்?  எனது தலைவன் நானா? எனக்கு எதற்கு தலைமை பொறுப்பு? போன்ற அனைத்து கேள்வியையும் ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள். இல்லை இல்லை பலமுறை  கேட்டுக்கொள்ளுங்கள். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அறியும் முன்பு,

ஒரு மாபெரும் வெற்றியாளனின் தலைமையை ஏற்க ஏன் கோடிக்கணக்கான வீரர்கள் காத்திருக்கின்றனர் என்பதை சரித்திரத்தினூடாக அறிவோம்.அது ஒரு கொடிய போர் பயணம். சுற்றியும் வறண்ட மணல் திட்டுகளை தவிர கண்களுக்கு தெரிவது தூரத்தில் வீசும் வெப்ப அலைகள் மட்டுமே தான்.  ஆயிரக்கணக்கான படைவீரர்களோடு தனக்கே உரித்தான கம்பீரத்தை கொஞ்சம் இழந்து தான் போயிருந்தான் அலெக்ஸ்சாண்டர்.

காரணம், பதினொரு நாட்களாக ஒரு நீண்ட போர் பயணத்தை  மேற்கொண்டு வெகு தூரம் அந்த வறண்ட பிரதேசத்தில் தனது படையுடன் பயணித்தாகி விட்டது.

       ஃபுசிபேலஸ்  விடும் மூச்சிரைப்பை பார்த்து  அலெக்ஸ்சாண்டரும் கொஞ்சம் கலங்கிதான் போனான். எத்தனை போரில் இந்த ஃபுசிபேலஸ் என்னை தாங்கி சென்று எனது வெற்றியை  சொந்தமாக்கித் தந்திருக்கிறது. என்று ஆறுதலுடன் தடவிக்கொடுத்து தனக்கு தானே உற்சாக வார்த்தைகளை கொடுத்து கொண்டிருந்தவனுக்கு பின்னால் ஒரு பெரிய கவலையும் இருந்தது.

படைவீரர்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தனர். தண்ணீர் தாகம் அனைவரையும் வாட்டி எடுத்தது. தோல்விகளையே சந்தித்திராத ஒரு உலக மாவீரன் தனது வீரர்களுடன் மிகவும் சோர்ந்து போய்யிருந்தான். இந்த பயணத்தை கடந்து போர் வேற செய்ய வேண்டுமே?

படை வீரர்களிடையே சோர்வு மேலோங்கிய காரணத்தால் அவர்கள் பின்வாங்கவும் நேரிடும் நிலை உருவாகிவிடும் அல்லவா?

அப்பொழுது, தனது சொந்த ஊரில் இருந்து வந்திருந்த சில வீரர்கள்  நெடு தூரம் சென்று தேடி தனது தோல்பையில் சிறிது நீரை நிரப்பி வந்து அரசன் முன்பு நின்றார்கள்.

படைவீரர்கள் வரிசையில் நின்றுகொண்டிருக்க,,  மத்தியில் யாருக்கும் அடங்கிராத  ஃபுசிபேலஸ் குதிரையின் மேல் நாவறட்சியுடன் அமர்ந்திருக்கும் அரசனிடம் ஒரு இரும்பு தலை கவசத்தை கவிழ்த்து அதில் பையில் இருந்த நீரை ஊற்றி அரசனின் தாகத்தை தனிக்க பவ்யத்துடன் நீட்டினர்.

     இரத்தத்தையே ஆறாக ஓட விட்ட ஒரு மாபெரும் சரித்திர வீரன் தன் படைகளுடன் ஒரு கோப்பை தண்ணீரை மிக ஆவலுடன் தன் கைகளில் வாங்கியதில், புழுதி படர்ந்த அந்த பிரதேசத்தில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை.

மிகுந்த நாவறட்சி எதிரே படைவீரர்கள். இதோ போர் அருகில் தான் நடக்க உள்ளது. 

ஆவலுடன் தண்ணீரை வாங்கிய அந்த மாபெரும் தலைவன், திரும்பி ஒரு முறை தனது பெரும் படையை பார்த்தான்.

அரசனையே அனைத்து  வீரர்களும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

      யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது கையில் இருந்த தண்ணீர் கவசத்தை தூக்கி மணலில் விட்டெறிந்தான்.

" எனது வீரர்கள், எனது வெற்றி அவர்களின் பங்களிப்பை விட இந்த தண்ணீர் எனக்கு முக்கியமில்லை!!" என்று மூழங்கினான்.

      அரசனின் இந்த செயலை கண்ட அனைத்து வீரர்களும் மிக ஆவேசமாக வெற்றி முழக்கத்தை முழங்கியவாறே குதிரைகளின் மேல் பாய்ந்து ஏறினர். போர்களத்தை நோக்கி!!!

தன் சக வீரர்களுக்கும் உள்ள வேட்கையை தீர்க்க முடியாத பொழுது, தான் மட்டும் நீர் அருந்துவதை மனம் ஏற்காமல் செய்த ஒரு செயல் அந்த போரிலும் தன் வீரர்களால் வெற்றியாக அந்த மாவீரனுக்கு மாற்றிக்காட்டியது.

என் அடையாளம் எனது வெற்றி - மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

இதோ அருகில் தான் போர்களம்!! வீரனே இன்னும் என்ன சோர்வுடன் இருக்கின்றாய்?

புறப்பட தயாராகு. ஒரு நல்ல தலைவனாக  நீ தான் அடையாளம் காணப்பட்டிருக்கின்றாய்.

உனக்குள் இருக்கும் தலைமை பண்பையும் சேர்த்து தன்னம்பிக்கையும் துணையாக கொண்டு  உரக்க சொல்...

" தமிழ் என் அடையாளம் " என்று 


வரலாற்றின் பக்கங்களுடன் உங்கள் பகுத்தறிவையும் சேர்த்து அடுத்தடுத்த பதிவுகளில் சந்திக்கலாம்.


  Get Your Online Business

 • Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com

  Brand Promotion

 • Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com

Comments

 1. நல்லதொரு எடுத்துக்காட்டுடன் அருமை... தொடர்கிறேன்...

  நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்