உடற்பயிற்சியும் அதன் பயன்களும்!!!


உடற்பயிற்சியும் அதன் பயன்களும்

இயல்பாகவே    இயற்கை   நமக்கு   சில   தடுப்புச்   சத்திகளைக்   கொடுத்துள்ளது. இயற்கை   வசதிகளை   ஏற்படுத்தி   வைத்திருக்கிறது. இதையே  நாம்    நோய்  எதிர்ப்பு  சத்தி  என்கிறோம். இந்த  தடுப்புச்  சத்திகளையும் கடந்து போகும் நிலை உண்டானால் உடல் கெடுகிறது. நமது   செயல்களான உணவு, உழைப்பு, உறக்கம், எண்ணம், புலனின்பம்    ஆகியவற்றை அளவு முறைகளோடு கையாண்டால் உடல்    பாதிப்புகளிலிருந்து நம்மை  காத்துக்கொள்ள முடியும்.  

                              

நடைமுறை வாழ்க்கையில் நமது தொழில்முறைகளுக்கேற்ப சில உறுப்புகளை மட்டுமே நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக   லாரி   ஓட்டுநரின்   கால்களும், கைகளும் குறிப்பிட்ட  இயக்கங்களையை   பெறுகின்றன. ஒரு  கல்  உடைக்கும் தொழிலாளி கைகளுக்கு மட்டுமே அதிக   இயக்கம்  தருகிறார். இவ்வாறு   குறிப்பிட்ட  உடல்   பகுதிகளை   அளவுக்கு   அதிகமாக  இயக்கி   உடலின்   மற்ற  பகுதிகளை  முறையாக   இயக்காமல்   இருப்பது  உடல்   நலத்திற்கு   உகந்ததன்று. இன்றைய சமுதாயத்தில் நிலவி  வரும்  போட்டி  மற்றும்    வேகமான   வாழ்க்கை  காரணமாக பலவிதமான   எண்ண   அழுத்தங்களினால்     நாம்  பாதிக்கப்படுகிறோம். இவற்றிலிருந்து   நம்மை   காத்துக்   கொள்ள  உடலுக்கும், மனதுக்கும்   இணக்கமான  உடற்பயிற்சி   தேவைப்படுகிறது.

    கருவமைப்பு மூலமாக வருகிற நோய்களையும், கோள்களின் நிலை மற்றும்   தட்பவெப்ப மாற்றங்களினால் வருகிற பாதிப்புகளையும் எதிர்  கொள்ள   வேண்டிய கட்டாயம்  நம்     அனைவருக்கும்   உண்டு.ஆகவே   நம்   நோய்   தடுப்புச் சக்தியை பெருக்கிக் கொள்வதற்கான உடற்பயிற்சியை செய்ய    வேண்டும்.  உடல் உறுப்புக்கள் அனைத்திலும்  குறைந்த பட்ச இயக்கத்தை    அன்றாடம் பெறுகிற வகையில் எல்லா வயதினருக்கும் ஏற்ப  ஓர் எளிய    முறை   உடற்பயிற்சி    நமக்கு   அவசியமாகிறது.   

                                         

இத்தகைய உடற்பயிற்சியினால் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம்   இவை   மூன்றும்   சீராக   அமையும். இந்த    எளிய    முறை   உடற்பயிற்சியில் கை, கால், கண், முதுகுத்தண்டு முதலியவற்றிற்கு    முறையான இயக்கப்பயிற்சிகளும், நுரையீரல் மற்றும் சுவாச   முறைகளுக்கான பயிற்சிகளும் இருத்தல் அவசியம்.    

இத்தகைய உடல்பயிற்சிகளை நாம் தினந்தோறும் தவறாமல் கடைபிடித்து, உடல் நலத்தைப் பேணிக்காப்போம்...

நன்றி!!!

இப்படிக்கு,
சிநேகிதி..

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்