விறு விறுப்பாகுது சென்னை வடிவமைப்புக் கண்காட்சி - பதிவு -2

எல்லோருக்கும் இனிய வணக்கம். முதல் பதிவின் தலைப்பு சென்னையில் நடை பெற்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கு அப்படிதானே இருந்தது. இப்போ இங்கே விறு விறுப்பு எங்க வந்துச்சுன்னு கேக்கறீங்க.ஒரு விஷயம் புரியறதுக்கு முன்னாடி கொஞ்சம் விறு விறுப்பு குறைவா இருக்கலாம். இப்போ நல்ல கண்காட்சியில் இருக்கிற விஷயங்கள் புரிய ஆரம்பிக்க இப்போ சுர்ர்ர்ர் விறு விறு!


அப்போ முன்னாடி புரியலையானு கேட்டா  புரிஞ்சது, ஆனா முழுக்கப் புரிய ஆரம்பிச்சு  தலைப்பையும் கொஞ்சம் மாத்தினது உங்களை இந்த அருமையான்  கண்காட்சிக்குள்ளே  வர வைக்கத்தான். வாங்க மேல போலாம்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால்  ஒரு புதிய பொருள் கண்டுபிடிப்பு ஏற்கனவே இருக்கும் பொருளை சிறப்பாக்குவது இந்த வடிவமைப்பு தான்.

இப்போது நாம் உபயோகிக்கும் டேபிள் டாப் ஆட்டுக்கல்லு, காரட் போன்ற கனமானவற்றை சாறு பிழியும் மிக்சர் போன்றவை புதிதாகத் தோன்றிய வடிவமைப்பு யோசனை மற்றும் வடிவாக்கத்தால் நமக்குக் கிடைத்துள்ளன என்பது புதிய செய்தியாக இருந்தது. விறு விறுப்புக் கூட ஆரம்பித்தது.
அரங்குகளில் இருந்த புதுமையான பொருட்கள் என்னை பார் என்னை பார் என்று அழைக்க ஒவ்வொன்றாக எட்டிப் பார்த்தேன்

 
 
படத்தில் இருப்பது 16 மணி  நேரம் எரியும் சூரிய மின் விளக்கு.

படத்தில் இருப்பது ராணுவத்தினருக்கான சிறப்பு பென் டிரைவ் இதில் அதன் உரிமையாளர் விரலை நுழைத்தால்தான் கணினியில் போட்டுப் பார்க்க முடியும்.  ராணுவ ரகசியங்கள் காக்க உதவும்


இன்டர்நெட் வசதியுள்ள தொலைக் காட்சிக்கு ரிமோட் மற்றும்  இன்டர்நெட்டில் ஆணைகள் உள்ளீடு செய்யும் விசைப் பலகை

இது போன்ற கருவிகள் மற்றும் உபயோகப் பொருட்கள் ஏராளம். இங்கே இதைப் போட எதை விட என்று அவ்வளவு இருந்தன. அடுத்த பதிவில் சிலவற்றையும் மாணவர்களுக்கு நமக்கு எப்படி  இவை உபயோகம் என்பதையும் மாணவர்கள் இந்த வடிவமைப்பு கல்வியை எங்கு படித்து நல்ல சம்பளம் பெறலாம். இவற்றை சந்தைப் படுத்தும் வாய்ப்பு , வடிவமைப்பு பரிசுப் போட்டிகள் எல்லாவற்றையும் பார்த்து விடலாம். அடுத்த பதிவில் சந்திக்கும் வரை இப்போதைக்கு கொஞ்சம் இடை வெளி.

Comments

  1. புதுப்புது தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. சென்னையில் கண்காட்சியில் நடைபெற்ற அனைத்து வடிவமைப்புகளையும் நானே நேரடியாக சென்று பார்ர்த்தே தீருவேன் என்று அடம்பிடித்து இந்த் வயதிலும் அசராது சாதனை செய்துவிட்டீர்கள்...

    உங்களின் தேடல் மிக சிறப்பானதாக நமது தொழிற்களம் வாசிப்பவர்களுக்கு பயனுள்ளதாகட்டும்

    மிக்க நன்றி!!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்