வடிவமைப்பு போட்டிகளும் பரிசு பெற்ற வடிவமைப்புகளும் -சென்னைக் கண்காட்சி -பதிவு -3

சென்னை நந்தம் பாக்கத்தில் சென்னை வர்த்த மைய வளாகத்தில் சென்னை மாநாடு அரங்கில் நடை பெற்ற சர்வதேச வடிவமைப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்  தொடர்ச்சியாக இதோ புதிய தகவல்கள் .

தயாரிப்பாளர்களுக்கு  உறுதுணையாக இருப்பது பொருள் எப்படி இருக்கும் என்பற்கான வடிவமைப்பு தான் . இது வடிமைப்பு கண்காட்சி என்பதால் ஒளி விளக்குகள் , மின் வீட்டு சாதனங்கள்,  அலுவலக உபயோகப் பொருட்கள் , அலங்காரப் பொருட்கள், கட்டிட மற்றும் போழுபோக்குப் பொருட்கள் உள்ளிட்ட 30 வகை வடிமைப்புப் பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்று சிறந்த வடிமைப்பு செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. கண்காட்சியில் பரிசு பெற்ற வடிவமைப்புகள் சுவரொட்டிகளாக செங்குத்துப் பலகைகளில் ஓட்டப் பட்டிருந்தன. அவற்றைப் பற்றியும் இப்போது பார்க்காலாம் வாங்க.

இந்தப் போட்டிகளில் கலந்து  வடிவமைப்பாளர்களும் வடிமைப்பு படிப்பு படிக்கும் மாணவர்களும் கலந்து கொண்டார்கள். இது கண்காட்சிக்கு  முன் கூட்டியே அவர்களுடைய நுழைவுகள்  பெறப் பட்டு தேர்வு செய்து பரிசுகள் வழங்கப் பட்டன.  படத்தில் இருப்பது  தடுப்பூசி கெடாமல்  ஒரே  வெப்ப நிலையில் வைத்திருக்கும் குப்பி. . சரக்கு  பிரிவில் பரிசு பெற்றது. இதை இயற்கை மொட்டில் இருந்து பூ விரிவதை  முன் மாதிரியாக வைத்து இதன் உள்ளே அடைக்கப் படும் தடுப்பூசிக் குப்பிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்படி அமைக்கப் பட்டுள்ளது  இதை வடிமைத்தது நிகில் அவுட்டேடு என்கிற வடிவமைப்பாளர். தடுப்பூசி கையாளும் அனைத்து மருத்துவத் துறைக்கும் இது உபயோகமானதாக இருக்கும் இது  வெப்பக் கதிர் , புற ஊதா , அக சிவப்பு கதிர் வீச்சு ஏதும் இல்லாத குழந்தைகளுக்கு மிகவும் பாது காப்பான BPL  படிக்கும் விளக்கு(BPL study lite).இதன் வடிவமைப்பாளர் அபிஜித் பன்சோடு இது மனோஜ்னா பெல்லூர்  உருவாக்கிய சுவற்றில் தாவரம் வளர்க்கும் கருவி. இதை சுவற்றில் பொருத்தி தாவரம் வளர்க்கலாம். 

இது மாற்றுத் திறனாளிகளுக்கு பயன் படும் சாதனம். இதை காலுடன் இணைத்துக் கொண்டு நடக்கலாம் 

இது கல்வி படங்களை நகரும் படங்களாகத் தரும் டேப்ளட் கணினி.ஒரு மின்னணு வாசிப்பி. (e reader)  இதை உருவாக்கியது மனோஜ் குமார் என்கிற பொறியியல் படித்து வடிவமைப்புத் துறைக்கு வந்து பெங்களூருவில் பணி திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் என்பது குறிப்பிடத் தக்கது. 

இது போன்ற தகவல்கள் ஏராளம். இந்தப் பதிவை அடுத்து இந்த வடிவமைப்பு கல்வி படித்தால் எப்படி மாணவர்கள் நல்ல சம்பளம் பெறும் வேலை வாய்ப்பைப் பெறலாம் என்பதைப் பார்க்கலாம். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

Comments

 1. nice to see my design(e book reader) in the blog sir...this is a real honour..:)

  ReplyDelete
 2. Sure even though u didnt tell me. i found out. all honours to all design winners. you deserve that. thanks

  ReplyDelete
 3. பயன் தரும் புதிய தகவல்கள்...

  நன்றி...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்