வடிவமைப்பு படித்தால் 30,000 முதல் 1.50 லட்சம் வரை சம்பளம் ! -சென்னைக் கண்காட்சி -பதிவு-4

கடந்த பதிவில் வடிமைப்புக் கண்காட்சி பற்றியும் பரிசு பெற்ற வடிவமைப்புகள்
சிலவற்றையும் பார்த்தோம். இந்த போட்டிகளில் வடிவமைப்பு
நிறுவனங்களில் வேலை பார்ப்போரும் மாணவர்களும் பங்கெடுத்துக்
கொண்டு பரிசு பெற்றனர்
இந்தக் கண்காட்சி வடிவமைப்பு நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர்களுடன்
தொடர்பு ஏற்படும் படி இருந்ததுடன் வடிவமைப்பு படிப்பு படிக்கும்
மாணவர்களுக்கு இந்த நிறுவனங்களில் படிக்கும் போதே
அறிக்கை தயாரிக்கும் பயிற்சியில் ஈடு பட வாய்ப்பு ஏற்படுத்துவதாகவும்
இருந்தது.
மாணவர்கள் அதிகம் படிக்காத வடிமைப்புத் துறையும் ஒரு நல்ல வேலை
வாய்ப்பை வழங்கும் ஒரு படிப்பு. அதைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்
நான்கு வருட பட்டயப்
படிப்புக்கு வருடம் 1.25 லட்சம் வரை படிப்புக் கட்டணம் ஆகிறது.
இது தொடர்பான ஒரு சர்வதேச கல்வி நிறுவனம் நான்கண்டுகளுக்கு 40
லட்சம் கட்டணம்
வாங்குகிறது என்று அறிந்த போது மலைப்பாக இருந்தது. 1.25 லட்சம் கட்டண கல்வி
நிறுவனத்தில் படித்தாலே நல்ல சம்பளம் கிடைக்கும்.. படித்து முடிக்கும் மாணவரின் திறமையைப் பொறுத்து
நல்ல சம்பளம் கிடைக்கும்
இந்தியா முழுவதும் இந்த வடிவைப்பு கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் பொறியியல் கல்லூரிகள் போல பெரும் எண்ணிக்கையில் இல்லை. நமது
பகுதியில் கோவைக்கு அருகிலேயே ஒரு வடிவமைப்பு கல்லூரி உள்ளது. அதன் முகவரி
பகுதியில் கோவைக்கு அருகிலேயே ஒரு வடிவமைப்பு கல்லூரி உள்ளது. அதன் முகவரி
DJ Academy of Design
Coimbatore - Pollachi highway
Othakkalmandapam(PO)
Coimbatore- 641 032
'phone: 0422- 2610 333 2610428
இந்தக் கல்வி நிறுவனத்தில் இருந்து வந்திருந்த அதன் முதல்வர் திரு பலராம்
அவர்களையும் அங்கு படிக்கும் மாணவர்களையும் நேரில் பார்த்து அவர்களுடன்
கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த வடிமைப்பு படிப்பு படிக்க விரும்புவோர் இந்த முகவரியை பயன் படுத்திக் கொள்ளலாம்
அடுத்த பதிவில் வடிமைப்புத் தொழிலுக்கு நிதி உதவி தரும் மத்திய அரசு
நிறுவனம் பற்றியும் இந்த வடிவமைத்த பொருட்களின் சந்தை வாய்ப்பைப் பற்றியும்
பார்க்கலாம் . காத்திருங்கள்
நல்லதொரு தகவலுக்கு நன்றி...
ReplyDeleteEnathu Nanri. Intha thagavalgal anaivarukkum poi sernthaal niraiyap per payan peruvaargal.
ReplyDelete