90 அடி நீள ஜிகு ஜிகு பேருந்து!

 

 

 
சீனாதான் இதுவரை மிக நீளமான பேருந்து வைத்திருக்கும் நாடாக இருந்து வந்தது. அங்கே 82 அடி நீள பேருந்து உண்டு. இப்போது ஜெர்மனியின்  ட்ரெஸ்டென்  நகரில் 90 அடி நீளப் பேருந்து சோதனை ஓட்டமாக விடப் பட்டு உள்ளது. உலகின் மிக நீளமான பேருந்தாக இதை எடுத்துக் கொள்ளலாம். இதில் 256 பேர் பயணம் செய்யலாம். இதை எந்த பேருந்து ஓட்டுனரும் ஓட்டலாம். தனியான சிறப்பு ஓட்டுனர் உரிமம் எதுவும் தேவை இல்லை. இதை ஓட்டுவதற்கென்று  ஒரு கணினி மூலம் திருப்பும் தொகுதி பேருந்தில் உள்ளது.

 இதை உருவாக்கியது பிரோன்ஹோபர் போக்குவரத்து மற்றும் கட்டுமானக் கல்வி நிறுவனம். இதை நகரில் ஓட்டுவதில் எந்த சிரமமும் இல்லை. ஆனால் இது போக்குவரத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் ஒரே கவலையாக உள்ளது என்று அந்த கல்வி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஒரு ரயில் வண்டியை விட செலவு குறைவானது என்பதால் இதில் இடம் பிடித்து பயணிக்க நிறையப் பேர் ஆவலாக உள்ளனர்.

ஜிகு ஜிகு பேருந்து வருது வாங்க ஏறிக்கலாம் ,  ரைட் போலாம்!
Comments

  1. யம்மாடி...! வியப்பாக உள்ளது... நம்ம ஊரில் இந்தளவு ரோடே இல்லையே...

    ReplyDelete
  2. athaane. neenga solrathum sari! Nanri.

    ReplyDelete
  3. ஆஹா!இவ்வளவு நீளமான பேருந்தா!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்