வெற்றியின் ரகசியம்.


வெற்றியின் ரகசியம்...
*முன்னேற்றத்தின் முதல் எதிரி கூச்ச சுபாவம். மற்றவர்களிடம் சகஜமாகப் பேசமுடியாத தயக்கத்தைப் போக்க பேசுபவரின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

 *ற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்னும் எண்ணத்தை மாற்றுங்கள். அடுத்தவர்களின் நினைப்பைத் தள்ளி வைத்துவிட்டு நல்ல விசயங்களை தைரியமாகப் பேசுங்கள்..

*நிறையப் படித்து நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அறிவியல், அரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருங்கள்.

*உங்களுக்கான லட்சியம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதனை அடைவதற்கான முயற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள்.

*ற்றவர்களை திருப்திப்படுத்த வேண்டி எதையும் செய்யவேண்டாம். உங்களுக்கு சரி எனப்படுவது சரியாக இருந்தால் தயங்காமல் செய்யலாம். தவறு என உணர்ந்தால் தயங்காமல் நிறுத்திவிடுங்கள்.

*பாராட்டுதல்களே வளர்ச்சியின் தூண்டுகோல். எனவே உங்கள் திறமைகளை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.

*டல், முகத்தோற்றம் பற்றிய குறைகளை, எதிர்மறையான எண்ணங்களைத் தூக்கி எறியுங்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தால் போதும்.

*நேர்மறையான சிந்தனை செய்யுங்கள். காரணம் நீங்கள் எதை அதிகம் சிந்திக்கிறீர்களோ அதுவாகவே மாறிவிடுவீர்கள்.


*ந்தத் துறையில் உங்களுக்கு திறமை, ஆர்வம் இருக்கிறதோ அதனை வளர்த்துக் கொள்ளுங்கள்.  இது உங்கள் தன்னம்பிக்கையை மேலும் அதிகமாக்கும்.
 
*இவற்றை உங்கள் வாழ்விலும் நடைமுறைபடுத்தி பாருங்கள் சமுதாயத்தில் நீங்களும் வெற்றி பெற்ற மனிதர் தான்.
 
அன்புடன்
நாஞ்சில் மதி.
 

 

.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்