துணி பின்னும் ஆடும் நாற்காலி!

Elaborate rocking chair automatically knits while you relax

 
இதோ பின்னல் ஆடை வேலைகள் நடை பெரும் திருப்பூர் நகரத்துக்கு பொருத்தமான ஒரு செய்தி . வயதானவர்களுக்கு  ஆடும் நாற்காலியில் ஆடிக்கொண்டே செய்தித்தாள் வாசிப்பது , துணி பின்னுவது எல்லாம் பிடித்தமான பொழுது போக்கு. ஏன் இந்த இரண்டு நடவடிக்கைகளையும் ஒரே கலை நயமாக வடிவமைத்த கருவி மூலம் செய்யக் கூடாது?  இந்த  சிந்தனை செயல் வடிவம் பெற்று ஒரு ஆடும் நாற்காலி துணி பின்னும் இயந்திரமாகவும் அமைக்கப் பட்டது.

. சுவிட்சர்லாந்து கலை மற்றும் வடிவமைப்பு பல்கலைகழகத்தைச் சேர்ந்த லாமியன் புடி மற்றும்  காலின் பெயல்லெக்ஸ் ஆகியோர் இதை வடிவமைத்தவர்கள் . நாற்காலியில் உட்காந்திருப்பவர் முன்னும் பின்னும் ஆடும் போது ஏற்படும் இயக்கம்  கியர்களை சுழலச் செய்து  இந்த தானியங்கி பின்னும் இயந்திரத்தை முடுக்கி விடுகிறது. ஆடிக் கொண்டே இதோ கொஞ்ச நேரம் ஆச்சு . உங்களை குளிரில் வெது வெதுப்பாக வைத்துக் கொள்ளும்  ஸ்வெட்டருக்குண்டான  துணி ரெடி!

இந்த ஆடும்- பின்னி தற்போதுதான் நடந்து முடிந்த குறைவான தொழில் நுட்ப தொழிற்சாலை வடிவமைப்பு கண்காசிக்காக உருவாக்கப் பட்டது. எப்போது இது சந்தைக்கு வரும் என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.  இது சந்தைக்கு வந்தால் வயதானவர்களும் பின்னும் இதை திருப்பூர் வாசிகளும் பயன் படுத்திக் கொள்ளலாம் 

Comments

  1. புதுமையான தகவலை அறியச்செய்தமைக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்