Ads Top

விண்வெளி சுற்றுலாக் கழகத்தின் இந்தியக் கிளையில் பங்கு பெற வாய்ப்பு

 

முதன் முதல் விண்வெளி சென்ற விண்வெளி வீரர் ரஷ்யாவின் யூரி ககாரின். 1961 இல் இவர் சென்று வந்த பின்னர் அமெரிக்காவும் ஆலன் செப் ஹெர்ட் என்ற விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பியது விண்வெளிக்கு விண்வெளிக்கு செல்லும் திறன் பெற்ற நாடுகள் இப்போது அமெரிக்க, ரஷ்ய,  சீனா  ஆகிய மூன்றுதான் உள்ளன. விண்வெளிக்குச் செல்ல கடும் தேர்வு செயல் முறைகளின் படி ஆனால்  விண்வெளியில் பூமிக்கு மேல்  பூமியைச் சுற்றும் குடியிருப்புகள், சந்திரனில் குடியிருப்புகள் என்று முயற்சிகள் நடை பெறத் துவங்கியுள்ளன. விண்  பாறையில்  இருந்து கனிமங்கள் வெட்டி எடுக்கும் திட்டத்துடன் ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டு உள்ளது. டைடானிக் பட  இயக்குநர் ஜேம்ஸ் கமரூனும் இந்த நிறுவனத்தில் இடம் பெற்று உள்ளார் நிலவில் பிஸ்ஸா உணவகம் அமைக்கும் டொமினோ நிறுவனத்தின் திட்டம் பற்றி இங்கு பதிவு இட்டு இருந்தேன்.

இந்த நிலையில் விரும்பும் யாரையும் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வர்ஜின் காலக்டிக் என்ற நிறுவனம் ஒரு நபருக்கு 2,00,000 டாலர் கட்டணத்தில் 500 பேருக்கு மேல் இப்போதே பதிவு செய்து வைத்துள்ளது. மேலும் பதிவுகளைத் தொடர்ந்து படி உள்ளது. அடுத்து எக்ஸ் காலிபர் அல்மாஸ் என்கிற நிறுவனம் ஒரு நபருக்கு 100 மில்லியன் பவுண்டுகள் கட்டணத்தில் நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டத்தை அறிவித்து உள்ளது.

விண்வெளியில் எனது பங்காக விண்வெளியில் நடக்கக் கூடிய நிகழ்வுகள் பிரச்னைகள் அவற்றை எதிர் கொள்ளும் யோசனைகள் எல்லாம் எனது அறிவியல் கதைகளில் எழுதி உள்ளேன். விண்வெளி சுற்றுலா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இயங்கி வரும் விண்வெளி சுற்றுலாக் கழகம் என்ற அமைப்பின் கீழ் நான் அதன் இந்தியப் பிரிவு நிறுவனர் ஆக உள்ளேன்.அது குறித்த தகவலை எனது பின்வரும் முக நூல் பக்கத்தில் காணலாம்

https://www.facebook.com/SpaceTourismSocietyIndianChapter?ref=ts&fref=ts

2011 இல் ஐ ஐ டி கரக்பூரில் தேசிய விண்வெளி சவால் போட்டியில் சந்திரனில் குடியிருப்பு தலைப்புக்கு மாணவர்களுக்கு ஆலோசகர் ஆக இருந்தேன்.அவர்களுக்காக நான் எழுதிய ஆங்கிலப் பதிவை பின் வரும் இணைப்பில் காணலாம் .

http://www.scribd.com/doc/88223591/Setting-Up-a-Moon-Lab-and-Living-There

 நான் தனியார் விண்வெளி  பயணங்கள் குறித்து கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியில் உரை நிகழ்த்தி உள்ளேன். அந்த உரையை பின் வரும் இணைப்பில் காணலாம்.

http://www.scribd.com/doc/98765888/The-Roaring-Future-of-Commercial-Space-Flights

மலேசியாவில் விண்வெளி செல்ல தளம் அமைக்கப் படுகிறது. இதில் சவூதி  அரேபியா இளவரசர் மற்றும் ப்ருனெய் சுல்தானும் இதில் முதலீடு செய்ய உள்ளனர். இதில் நமக்கான நற்செய்தியாக இந்த விண்வெளி ஆயத்த தளத்தில் விண்வெளி சுற்றுலா கழத்தின் இந்திய கிளையின் அலுவலகத்தை நிருவிக் கொள்ள இடம் ஒதுக்கித் தருவதாக எனக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த இந்தியக் கிளையினை பதிவு செய்து இணைய தளம் அமைக்கும் பூர்வாங்க வேலைகள் நடை பெற்று வருகின்றன . இந்த நிலையில் இந்த இந்தியா கிளையில் பங்கு பெற முதலீடு செய்ய விரும்போவோர் எனது மின்னஞ்சல்        mohansanjeevan2011@gmail.com   க்கு தொடர்பு கொள்ளலாம். எனது கைப் பேசி எண்  95979 05841

3 comments:

  1. நன்றி ஐயா, உங்கள் அறிமுகம் கிடைத்தமைக்கு நன்றி, என் வலைப் பதிவையும் பாருங்களேன், kavithai7.blogspot.in.

    ReplyDelete
  2. Naan ariviyal pathivaik kaattilum ariviyal meethum ariviyal nadavadikkaigal meethum athiga aarvam ullavan. Ithanaalthaan ithu pol en pathivugal amaiginrana. Ippothaikku ariviyalai neradiayaga makkalidam kondu sellum arimugangal athigam thevai. enakku samayam kidaikkumpothu valaipathivaip padikkiren.

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.