இந்தியா மனிதர்களை எப்போது விண்வெளிக்கு அனுப்பும்?1961 இல் யூரி ககாரின் விண்வெளிக்குப் போன முதல் விண்வெளி வீரர் ஆனார் அவர் சென்ற சில மாதங்களிலேயே ஒரு மாதத்திலியே அமெரிக்காவின் ஆலன் ஷெபர்ட் விண்வெளி சென்ற இரண்டாவது விண்வெளி வீரர் ஆனார். அதன் பிறகு வெகு வருடங்கள் கழித்து 2003 இல் சீனா தனது விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பியது. மக்கள் விடுதலை ராணுவத்தின் தளபதி யாங் லிவேய் தான் அந்த வீரர்.இன்றைக்கு ரஷ்யா , அமெரிக்கா  மற்றும் சீனா ஆகிய நாடுகள் தன விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் நாடுகளாக உள்ளன. அதிலும் இப்போது ஸ்பேஸ் ஷட்டில் விண்கலத்தை அனுப்புவதை ஜூலை 2011 இல் நிறுத்தியதால் ரஷ்யா மற்றும் சீனா தான. இப்போது விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லும் விண்கலங்களை தயாரித்து விண்வெளிக்கு அனுப்புகின்றன.  சர்வ தேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்க மற்றும் இதர நாட்டு வீரர்களை ரஷ்ய விண்வெளிக் கலம்  சோயூஸ் எடுத்துச் செல்கிறது.

நிலவுக்கு வீரகளை அனுப்பிய ஒரே நாடு அமெரிக்காதான். 1968 ல் நிலவில் கால் பதித்த முதல் வீரர் ஆக நீல் ஆம்ஸ்ட்ராங் ஆனா பிறகு 1972 வரை மேலும் ஐந்து முறை நிலவுக்கு விண்வெளி வீரர்கள் சென்று வந்துள்ளனர் ரஷ்யா , ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், நமது இந்தியா ஆகியவை ஆளில்லாத ரோவர்களை அனுப்பியுள்ளன. 2008 இல் இந்தியா தனது சந்திராயன் மூலமாக  ஆளில்லாத ரோவரை அனுப்பியது.

இப்போது செவ்வாய் கிரகத்திற்கும் இந்தியா ஒரு அதை சுற்றும் கலத்தை நவம்பர் 2013 இல் அனுப்ப உள்ளது. எல்லாம் சரி. ஏன் இன்னும் இந்தியா விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப வில்லை? இந்தியாவின் பொருளாதாரம் அந்த அளவு இன்னும் வலுப் பெற வில்லை , அரசாங்கத் தரப்பில் இருந்து அந்த அளவு முயற்சிகள் எடுக்கப் படவில்லை. இதனால் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் விசயத்தில் மிகவும் பின் பின் தங்கி உள்ளது. நிலைமை சீரானால் 2020 வாக்கில் முதன் முதல் விண்வெளிக்கு இந்திய வீரர்கள் அனுப்பப் படக் கூடும். அதுவும் நிச்சயம் இல்லை.  முயற்சிகள் நடை பெற்று இந்தியாவும் விண் வெளிக்கு வீரர்களை அனுப்பும் நாடாகும் என்று எதிர் பாப்போம்

Comments

  1. நல்ல தகவல்... இந்தியா, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் நாள் விரைவில் நடக்கட்டும்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்