அறிவியல் பதிவுகளின் தொழில் பின்னணி
 

அறிவியலில் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் புதிய பொருட்கள், புதிய தயாரிப்பு முறைகள், புதிய கருவிகள் , புதிய பயன் பாடுகள் பற்றி இங்கே இடம் பெறுகின்றன. மேல் 
எழுந்த வாரியாக படிக்கும் போது  என்னோவோ புதுசாக  வந்திருக்கு என்று நினைக்கலாம். கொஞ்சம் ஆர்வம் காட்டும் போது அன்றாட வாழ்க்கையில் நாமும் இது போல பயன்படுத்தலாமே என்று தோன்றும். இதை மனதில் வைத்து இது குறித்த தகவல்களையும் அறியும் முயற்சிகளும் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. சில புதிய பொருட்கள் கருவிகள் எங்கே கிடைக்கும் என்பது போன்ற தகவல்கள் சிறிது முயற்சிகளுக்கு பின் தான் கிடைக்கின்றன. இந்தத் தகவல்கள் கிடைக்கும் போது தொடர்பு கொண்டு அறியலாம். சந்தையில் பெற விரும்புவோருக்கு சந்தைப் படுத்தும் விதமாக தொழிற் களம் எடுக்கும் முயற்சிகளுக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்வதும் எனது நோக்கம்.

இதனால் அறிவியல் பதிவுகளை படிக்க இன்னும் ஆர்வம் தோன்றும்.  தொழில் ரீதியாகவும் சொந்த உபயோகத்திற்கும் புதியவற்றை பயன் படுத்திக் கொள்ளும்படி அமைவதே இந்த அறிவியல் பதிவுகளின் தொழில் பின்னணி. சுருங்கச் சொன்னால்அறிவியலுக்கும் தொழிலுக்கும் தூதுவர்களே  இந்தப் பதிவுகள். அறிவோம் வளம் பெறுவோம்.

ஒரு ஜோக்:

என்னங்க நீங்க பாட்டுக்கு புதுசா வந்திருக்குன்னு எழுதிட்டுப் போயிடறீங்க . இதை வாங்கிக் குடுங்க வாங்கிக் குடுங்கன்னு வீட்டிலே ஒரே தொல்லை.

அடடா. எனக்கும் அதே தொல்லைதான் .பொறுங்க கிடைக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சிருவோம். அப்பத்தான் தொல்லையை சமாளிக்க முடியும்!

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்