படுத்துக் கொண்டே புத்தகம் படிக்க, தொலைக் காட்சி பார்க்க உதவும் கண்ணாடி!

 


 
படுத்த படுக்கையாக எழ முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும் புத்தகம் படிக்கவும் தொலைக் காட்சி பார்க்கவும் ஆசையாக இருக்கும். அவர்களுக்கென்றே இதோ ஒரு பிரத்தியேகமான கண்ணடி.  அணிந்து கொள்ளும் முப்பட்டைக் கண்ணாடியான இது பெரிஸ் ஸ்கோப் போல 90 டிகிரி கோணத்தில் காட்சியை மாற்றிக் கொடுத்து படுத்தபடியே விரும்பிய புத்தகம் படிக்க , பிடித்த தொலைக் காட்சியைப் பார்க்க உதவுகிறது.

இதன் விலை 25 டாலர்.  வடிவமைப்பை மாற்றி சில நிறுவனங்கள் இதை 100 டாலர் வரை விற்கின்றன. இவற்றை ஏற்கனவே பார்வைக் குறைக்கக கண்ணாடி போட்டிருப்பவர்கள் தங்கள் கண்ணாடியின் மேல் சொருகிக் கொள்ளலாம்

எனது அமெரிக்க நண்பர் ஒருவர் தனது பல் மருத்துவரை பார்க்க சென்றபோது  இது போன்ற கண்ணாடி வழங்கப் பட்டு அவருடைய பல்லை மருத்துவர்  சீர் செய்து கொண்டிருந்த போது தொலைக் காட்சி பார்த்ததாகத் தெரிவித்தார். 

படுக்கையில் இருந்து எழ முடியமால் இருப்பவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இதைப் போட்டுக் கொண்டு ஹாயாக படுத்துக் கொண்டே படிக்கலாம் தொலைக் காட்சி பார்க்கலாம்

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்