தன் உடைப்புகளை தானே சரி செய்து கொள்ளும் கான்க்ரீட்!

 

 
கட்டிடங்கள் , பாலங்கள் இவற்றில் முக்கியமான கட்டிடப் பொருள் கான்க்ரீட் அவற்றில் சிறிய அளவில் விரிசல்கள் உண்டாகும் போதே சரி செய்து கொள்ளும் கான்க்ரீட்  வந்துள்ளது.

அது தானாகவே இப்படி சரி செய்வது போலத் தோன்றினாலும் அப்படி சரி செய்வது கான் கிரீட் கலவை தயார் செய்யும்போதே அதனுடன் கலக்கப் படும் நுண்ணுயிரி தான்.  ஊட்டச் சத்துக்களுடன் இந்த நுண்ணுயிரியையும் சேர்த்து கலக்குகிறார்கள். சிறு வெடிப்பு ஏற்படும் போதே ஊட்டப் பொருள்களில் உள்ள கால்சியத்தை சுண்ணாம்புக் கல்லாக மாற்றி ஓட்டையை அடைத்து விடும். சிறிய விரிசல்கள் தான் பிறகு பெரிதாகி கட்டிடங்கள் பாலங்கள்  ஆகியவற்றுக்கு ஆபத்தை உண்டு பண்ணும் என்பதால் வருமுன் காக்கும் விதமாக  நுண்ணுயிரிகள் செயல் படுகின்றன.
இந்த நுண்ணியிரிகள் கலக்கப் படுவதால் தயாரிப்புச் செலவு கண்டிப்பாக கூடும் என்றாலும் கட்டிடங்கள் , பாலங்களின் பாது காப்பைப் பார்க்கும் போது இது தேவையான செலவுதான். இப்படி நுண்ணியிரி கலந்த கான்கிரீட்டை  உயிரியல் கான்கிரீட் என்கிறார்கள்


Comments

 1. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது.

  தினபதிவு திரட்டி

  ReplyDelete
 2. naan ithu ponra thagavalgalai ingu thinamum pottu varukiren. ariviyalthozhil nutpa seythigalai parappum mugamaga en pathivugal.thirattiavai en sontha sinthanaigal ellaam undu.ungal varaverpukku nanri.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்