Ads Top

நான் பதிவர் அறிமுகம் - சதுக்க பூதம்


பதிவரின் பெயரை வாசிக்கும் போது வினோதமாக உணர்கிறீர்களா?

ஆனால் இவரின் எழுத்துக்கள் அத்தனை முத்தானவை.  

சிலர் பதிவுலகத்திற்குள் வரும் பொழுதே தங்கள் நோக்கம் இது தான் என்று தீர்மானமாக வந்து எழுதவும் தொடங்குகிறார்கள்.  

இது போன்ற ஒரு சமூக அக்கறை சார்ந்த பதிவுகள் தான் இவரின் தமிழ் ப்யூசர் என்ற வலைதளமும்.

இவர் இரண்டு தளங்களின் வாயிலாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

நான் ஹிந்தி படித்திருந்தால் இந்நேரம் வானளாவ உயர்ந்திருப்பேன் என்று இன்று வரையிலும் தமிழ்நாட்டில் பிறந்த பலரும் அங்கலாய்த்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.  


ஆனால் தற்போதைய சூழ்நிலையில் புற்றிசல் போல உருவான ஆங்கில வழி கல்விக்கூடங்கள் முறையான ஆங்கிலத்தையும் கற்றுக் கொடுக்க முடியவில்லை.  தாய் மொழியான தமிழை நேசிக்க மறந்த ஒரு சமுக்த்தையும் உருவாக்கியும் விட்டுள்ளது. எழுத வாசிக்கத் தெரியாத ஒரு தமிழ் இளையர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தாலும் காசு சம்பாரிக்க ஆங்கிலம் தானே உதவுது என்று நமக்கு நாமே சப்பைக்கட்டிக் கொண்டு தாய் மொழியை மெல்ல மெல்ல சாகடித்துக் கொண்டிருக்கின்றோம். 

இன்றைய வாழ்க்கை மொழிக்கலப்பு சமூகமாக மாறியுள்ளது. காலப்போக்கில் எந்த மொழியையும் சரியாக கற்றுக் கொள்ளாத விழியிருந்தும் குருடர்களாக இந்த உலகத்தில் நிறைய பாதிப்புகள் உருவாகப் போகின்றது. எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள்.  ஆனால் கண்கள் என்பது தாய்மொழி.  கண்ணாடி என்பது தான் பிற மொழி.  கண்கள் இல்லாமல் கண்ணாடி வழியே எதை ரசிக்க ருசிக்க முடியும்?


தற்போது மத்திய அரசாங்கம் அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்குள் உள்ளே கொண்டு வந்து நம் வாழ்வில் பாலும் தேனும் ஆறாக ஓட சபதம் எடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறது.  ஆனால் இந்தியாவின் தொடக்கத்தில் வியாபரத்திற்காக மட்டும் உள்ளே வந்த கிழக்கிந்திய நிறுவனத்தைப் பற்றி முழுமையாக உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றால் இந்தக் கட்டுரை தொடரை வாசித்துப் பார்க்கலாம்.

சமூகக்கட்டுரைகளைப் போலவே விவசாயம் சார்ந்த மற்றொரு தளத்திலும் எழுதிக் கொண்டிருக்கிறார். இந்தியா என்ற நாட்டை யோசித்து யோசித்து மண்டை காயுதுன்னு சொல்றவங்க இவர் காட்டும் ஹவாய் தீவு சொல்லும் ரகசியங்களையும், அந்த படங்களையும் பார்த்து விட்டு வரும் போது மனதில் ஒரு குளு குளு உருவாவதை தவிர்க்க முடியாது.

4 comments:

 1. அறிந்துகொண்டேன் அருமை.

  ReplyDelete
 2. நல்ல தளம்... பலரும் அறியக்கூடும்... நன்றி...

  ReplyDelete
 3. அறியாத் தகவலை பலரும் அறிந்து கொள்ளட்டும் பதிவுக்கு நன்றி......

  ReplyDelete
 4. என்னுடைய பதிவை இங்கு அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி.
  இந்தி பற்றிய கீழ் கண்ட பதிவு இன்னும் விளக்கமாக இருக்கும்.
  http://tamilfuser.blogspot.in/2012/06/blog-post_25.html

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.