பாகற்காய்: கசப்பில் ஒரு இனிப்பு.


பொதுவாக பாகற்காய் என்றாலே நம் குழந்தைகள் முகத்தை சுழிக்கும். சாப்பிட மறுப்பார்கள். சுவையானதெல்லாம் சத்தான பொருள்கள் அல்ல, சுவையற்றதெல்லாம் வீணான பொருள்களும் அல்ல. கசப்பான பாகற்காயில்தான் அமிர்தத்தில் இருப்பதைவிட அதிக பலன்கள் உள்ளன.

பாகற்காய்  உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். 

பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது.  

நீண்ட நாட்களாக இரத்தக்கொதிப்பு பாதிப்பு உள்ளவர்கள் இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பாகற்காய் ஒரு கொடி வகையைச் சேர்ந்த காயாகும். ஒரு கொடியைத் தூக்கத்  தூக்க ஒராயிரம் பாவக்காய் என்று  கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். பாகற்காய்  நமது நாவிற்க்குத் தான்  கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது.  

பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை  ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.

பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பாகற்காயில் உள்ள சத்துக்கள்:

100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து:
கலோரி  25 மி.கி
கால்சியம் 20 மில்லி கிராம்
பாஸ்பராஸ்  70 மி.கி
ப்ரோடீன் 1.6 %
கொழுப்பு 0.2%
இரும்புச்சத்து 1.8  மி.கி
மினரல்ஸ் 0.8%
பி-காம்ப்ளெக்ஸ் 88 மி.கி.
நார்ச்சத்து  0.8%
கார்போஹைட்ரேட் 4.2 %
சிறிதளவு விட்டமின் சி.

சிறுவர்களுக்கு வயிற்றில் பூச்சிகள் அதிகரித்து இரவு வேளையில் ஆசன துவாரத்தில் அரிப்பு எடுக்கும். இதற்கு பாகற்காய் இலையை கொண்டு வந்து சுத்தம் செய்து அம்மியில் வைத்து சாறு எடுத்து காலை வேலையில் அரை டம்ளர் அளவு உள்ளுக்கு கொடுத்து வந்தால் அப்பூச்சிகள் ஒரிரு நாட்களில் வெளியேறிவிடும்.

 தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும்.  அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. “மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்று தனது ஆய்வுகள் மூலம் நிரூபணம் செய்திருக்கின்றார்.

இவ்வாறு பல மருத்துவ பலன்கள் கொண்ட பாகற்காயை வாரம் ஒரு முறை நம் உணவோடு சேர்த்து சாப்பிட்டால், உடலில் எந்த வியாதியும் இல்லாமல் சுகமாக வாழலாம். கசப்பை சாப்பிட்டு இனிப்பான வாழ்வை தேர்ந்தெடுக்க பாகற்காய் சாப்பிடுங்கள்.


Comments

 1. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 2. இனிப்புடன் சொன்ன பயனுள்ள தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 3. பாக்ற்காயில் பல பயனுள்ள சத்துக்கள் இருப்பது உண்மைதான் அதன் கசப்பு சுவையால் தான் பலரும் அதைசாப்பிட முகம் சுளிக்கிரார்கள்.

  ReplyDelete
 4. உடலுக்கு இனிப்பை போலவே கசப்பும் வேண்டும் , நல்ல பலனுள்ள தகவல்கள் .

  ReplyDelete
 5. மிகவும் நல்ல பயனுள்ள தகவல்.....பகிர்வுக்கு மிக்க நன்றி...

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 6. உங்களின் ஆரோக்கியமான தகவலுக்கு நன்றி

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்